ஈப்போ பிப் 17-
பத்துகாஜாவில் உள்ள பெம்பான் நிலத்திட்டத்தில் புந்தோங்கில் உள்ளவர்களுக்கு இடம் இல்லை என்று ஊராட்சி மற்றும வீடமைப்புக்கு பொறுப்பேற்றுள்ள ஆட்சிக் குழ உறுப்பினர் யோங் சூ கியோங் கூறினார்.
பெம்பானில் ஒதுக்கீடு செய்துள்ள நிலத்திட்டத்தில் வசதி குறைந்தோர்களுக்கு குறைந்த விலை வீடுகளை நிர்மாணிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதில் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள வசதி குறைந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.
புந்தோங்கில் சீனப் புத்தாண டை முன்னணிட்டு நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
முன்னதாக நிகழ்வில் பேசிய புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆ..சிவசுப்பிரமணியம், புந்தோங்கில் நிலப்பிரச்சனையை எதிர்நோக்கியுள்ள மக்களுக்களுக்கு புந்தோங்கில் குறைந்த விலை வீடுகள. உருவாக்கப்படும் என்ற தகலைத் தெரிவித்தார்.
புந்தோங் தொடர்ந்து வளர்ச்சிக்கண்ட இடமாக விளங்கும் மக்களின் மேம்பாட்டிற்கு தொடர்து பல திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.

