Site icon அநேகன்

கராத்தே போட்டியில் இந்திய மாணவர்களின் சாதனை தொடர்கிறது

ஈப்போ பிப் 17-

பேரா மாநிலத்தில் கராத்தே போட்டியில இந்திய மாணவர்களின் சாதனை தொடர்கிறது.

மாநில கராத்தே சங்கம் இங்கு இன்று ஏற்பாடு செய்த சிறந்த போட்டியாளர்கள் தேர்வில் அதிகமான இந்திய மாணவர்கள் களம் கண்டு தேர்வாகியுள்ளனர்.

விரைவில் நடைபெறவிருக்கும் ஜூனியர் போட்டியில் பங்கேற்க போட்டியாளர்களை தயார்படுத்த இந்த தேர்வு நடைபெற்றது.

இதில் எதிர்வரும் 2020இல் ஜோகூரில் நடைபெறவிருக்கும் சுக்மா போட்டியில் பங்கேற்க அதன் தகுதியான  போட்டியாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று மாநில கராத்தே சங்கத்தின் தலைவர் கே.ஆனந்தன் கூறினார்.

இங்கு நடைபெறும் இநத தேர்வில் 8 வயது முதல் 20 வயதிற்கும் இடையிலான போட்டியாளர்கள் சுமார் 200 பேர் கலந்துக்கொண்டுள்ளனர்.

இது நீண்டகாலத்  திட்டம் எதிர்காலத்தில் சிறந்த விளையாட்டாளர்களை உருவாக்குவதே இதன் நோக்கம்.

இங்கு இந்த நிகழ்வு மாநில விளையாட்டு இலாகாவின் பேராதரவுடன் நடைபெறுகிறது என்பதை அவர் குறிப்பிட்டார்.

மாநில விளையாட்டு இலாகாவில் உள்ள அரங்கில் நடைபெற்ற போட்டியாளர்கள் தேர்வு  நிகழ்வை மாநில விளையாட்டுப் பிரிவிற்கு பொறுப்பேற்றுள்ள அதன் ஆட்சிக் குழு உறுப்பினர் ஹாவட் லீ நேரடியாக வருகைப் புரிந்தார்.

Exit mobile version