Site icon அநேகன்

பெம்பான் நிலத்திட்டத்தை ரத்து செய்வதா ? – ஜெயகணேஷ் சாடினார்

ஈப்போ பிப் 19-

புந்தோங்கில் புறம்போக்கு நிலத்தில் வசித்து வந்தவர்களுக்கு தேசிய முன்னணி அரசாங்கம் ஒதுக்கீடு செய்ய பெம்பான் நிலத்திட்டத்தை நடப்பு அரசாங்கம் ரத்து செய்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று மாநில ம.இ. கா . இளைஞர. தலைவர் செ. ஜெயணேஷ் கூறினார் .

பல ஆண்டுகள் போராட்டத்திற் குப்பி ன்பு பத்துகாஜாவில் பெம்பான் எனும் இடத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 586 குடும்பங்களை குடியேற்ற திட்டங்கள் வகுக்கப்பட்டிருந்தது.

இதற்கு முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீஜிப் துன் ரசாக் ரிம.50 லட்சத்தை வழங்கியுள்ளார்.

இன்று மாநிலத்தை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் அந்த நிலத்திட்டம் ரத்து செய்யப்படுள்ளது என்று புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆ.சிவ சுப்பிரமணியம் வெளியிட்டிருந்த அறிக்கை வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலப்பிரச்சனை சுமார் 40 ஆண்டுகால போராட்டம் . பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் கட்டமாக 133 குடும்பங்களுக்கு நிலம் வழங்க அறிவிப்புகள் செய்யப்பட்டதை நடப்பு அரசாங்கம் நிறுத்தியுள்ளது குறித்து ஜெயகணேஷ் சாடினார்.

இந்த விவகாரத்திற்கு விரைவில் தீர்வுக்காணப்படவேண்டும் கேட்டுக்கொண டார்

Exit mobile version