பங்கோர் பிப் 19-
நாட்டில் சுற்றுலா துறைக்கு புகழ்பெற்று விளங்கும் பங்கோர் தீவில் உள்ள அருள் மிகு ஸ்ரீ பத்தரகாளியம்மன் ஆலயத் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவைக் காண உள்ளுர் மற்றும் வெளியூர்களிருந்து ஆயிரக்காண பக்கதர்களும் மற்றும் சுற்றுப்பயணிகளும் திரண்டனர்.
இதில் சிறப்பு அழைப்பை ஏற்று இவ்விழாவில் கலந்துக்கொண்ட மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஏ.சிவநேசன் ஆற்றிய உரையில் இங்கு இந்த ஆலயத்தின் திருப்பணிக் கண்டு புதுப்பொழிவுடன் விளங்குவது மேலும் பக்தர்களையும் சுற்றுப் பயணிகளை மேலும் கவரும் என்றார்.
உலக ரீதியில் புகழ்பெற்ற இந்த ஆலயம் இந்தத் தீவில் 100 ஆண்டுகளுக்கு மேலாக அதனை சிறப்பான முறையில் வழி நடத்தி வரும் அதன் நிர்வாகத்திற்கு பாராட்டைத் தெரிவித்துக்கொண்டதுடன் ஆலய திருவிழா நிதியாக வெ.10,000 மற்றும் ஆலய வளாகத்தில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள மண்டபத்திற்கு வெ.25,000 அத்துடன் ஆலய அருகில் தமிழ்ப்பள்ளிக்கு வெ.5 ,000 வழங்குவதாக அறிவித்தார் .
இங்கு இந்த ஆலய வளர்ச்சிக்கு ஆதரவு வழங்கி வரும் அனைவருக்கும் ஆலயத் தலைவர் ஜெ. மோகனதாஸ் நன்றியைத் தெரிவித்துக கொண்டார் .

