Site icon அநேகன்

மும்பையில் மல்லர் கம்பம்,யோகா போட்டி; சிறந்த குழுவாக மலேசியர்கள் வெற்றி

கோலாலம்பூர், பிப் 20-

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பிரசித்தி பெற்ற  இந்தியர்களின் மிகத் தொன்மையான விளையாட்டுகளில் ஒன்றான மல்லர் கம்பர் அல்லது கயிறு யோகா இப்போது உலக மக்களிடையே பிரசித்தி பெற்று வருகிறது.

இக்கலை மலேசியாவிலும் வளர வேண்டும் என்ற நோக்கத்துடன் அலோகாஸ் ஆர்ட்ஸ் அகாடமி மும்பையை சேர்ந்த மல்லகம்ப நிபுணர் திரு.உதய் தேஷ்பாண்டே மற்றும் அதிதி தேஷ்பாண்டே அவர்களின் உதவியோடு கோலாலம்பூர் மற்றும் கெடாவில் பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட்டது.

மேலும், அலோகாஸ் பெர்சியாரான் ராஜா மூடா மூசா தமிழ்ப்பள்ளி மற்றும் பேரபிக்ட் லைப் மேனஜ்மென் நிறுவனத்தினர் ஆதரவுடன் அண்மையில் கிள்ளானிலும் கெடாவிலும் நடத்திய சிறப்பு பயிற்சி மற்றும் தேர்வு முகாமில் கலந்து கொண்டனர். அதில்  தேர்வு பெற்ற பிராகஸ்வதி கணேஷ், மேனகா ராமசுந்தரம், ஹொவ் குவான் எங், எங் மொய் செங் ஆகியோர் பிப்ரவரி 16 மற்றும் 17ஆம் தேதிகளில் மும்பையில் நடைபெற்ற மல்லர் கம்பம்,யோகா போட்டியில் கலந்து கொண்டனர்.

இவர்கள் சிறந்த குழுக்கான மூன்றாவது பரிசை பெற்று பெருமை தேடித் தந்தனர்.

Exit mobile version