செமினி, பிப் 22-
தேர்தல் பிரசாரம் தொடங்கி ஒரு வாரத்திலேயே தாம் மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டதாக செமினியில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் சுயேட்டையாக போட்டியிடும் குவான் சீ ஹெங் தெரிவித்துள்ளார்.
அரசியலைவிட மக்களின் நலனை பாதுகாப்பதே அவசியமானது என அங்கிள் கெந்தாங் என்று அழைக்கப்படும் சீ ஹெங் கூறினார்.
வசதி குறைந்த மக்களின் ஆதரவு அதிகமாக இருப்பதால் தேர்தல் பிரசாரத்தில் தாம் வெற்றிப் பெற்றதாக உணர்வதாக அவர் கூறினார்.
தாம் அரசியல் செய்வதற்காக இங்கு வரவில்லை என்றும் வசதி குறைந்த மக்களை தேடி அவர்களுக்கு உதவும் என்ற நோக்கத்திற்காகவே இங்கு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று இங்குள்ள நடவடிக்கை அறையில் தேர்தல் வாக்குறுதி நிகழ்வை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் சீ ஹெங் இதனை தெரிவித்தார்.
நிதி பிரச்னையால் பிரசாரத்திற்கு கால தாமதம் ஏற்பட்டாலும் மக்களுக்கு சேவைக்கு அது தடையாக இல்லை என்று அவர் கூறினார்.

