Site icon அநேகன்

கோல லாங்காட்டில் வசதி குறைந்த இந்திய மாணவர்களுக்கு தங்கும் விடுதி பள்ளி -டாக்டர் சேவியர் ஜெயகுமார் வாக்குறுதி

ரிஞ்சிங், பிப் 22-

கோல லாங்காட்டில் வசதி குறைந்த சுமார் 200 இந்திய மாணவர்கள் தங்கி பயிலும் பள்ளியை கட்டப்போவதாக குடிநீர், நிலம் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் தெரிவித்தார்.

மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளி வளாகத்தில் தங்கும் விடுதி பள்ளி ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அதே போன்று, கோல லாங்காடிலும் கட்டுவதற்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

அங்கு வசதி குறைந்த மாணவர்களுக்காக அந்த தங்கும் விடுதி பள்ளி கட்டப்பட்டு வருகிறது. அதே போன்று, கோல லாங்காட்டிலுள்ள வசதி குறைந்த இந்திய மாணவர்களும் இந்தத் தங்கும் விடுதியில் பயில வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் பள்ளியை தாம் கட்டப்போவதாக அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

செமினி சட்டம்ன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஐமானை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்து வரும் டாக்டர் சேவியர் இன்று மக்களை சந்தித்தபோது கெஅடிலான் உதவித் தலைவருமான அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த 2009ஆம் ஆண்டு சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்தபோது சிலாங்கூர் மாநிலத்திலுள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கும் வெ.40 மாணியம், கோவில்களுக்கு நிலம், மாணியம் வழக்கப்பட்டதோடு மிட்லண்ட்ஸ் தமிழ்ப்பள்ளியின் மண்டபம் கட்டப்பட்டது என்று அவர் கூறினார்.

Exit mobile version