கோலாலம்பூர், ஆக 24-
மூன்றாம் படிவ மாணவர்களுக்கான குடிமை மற்றும் குடியுரிமை கல்வி பாடத்திற்கான பயிற்சி நூலில் நாட்டின் முன்னாள் பிரதமர்கள் வரிசையில் துன் மகாதீரின் படம் இடம் பெறாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள தனிநபர்கள் மற்றும் தரப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அந்நூலை கல்வியமைச்சு வெளியிடவில்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மாறாக, திறந்தவெளி சந்தையில் அந்நூல் விற்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சின் மீதோ அல்லது என் மீதோ அவதூறு பரப்புவதற்காக சிலர் மேற்கொண்டுள்ள இந்நடவடிக்கை தொடர்பில் சட்டநடவடிக்கையை எடுப்பதற்கு கல்வியமைச்சு தயாராக உள்ளது. இந்நூல் குறித்து தற்போது முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக டத்தோஸ்ரீ மாட்சீர் காலீட் குறிப்பிட்டார்.
சம்பந்தப்பட்ட நூலில் முன்னாள் பிரதமரான துன் அப்துல் ரஹ்மான் முதல் நடப்பு பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் வரையில் படங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் நாட்டின் 4ஆவது பிரதமரும் நம்பிக்கை கூட்டணியின் தலைவருமான துன் டாக்டர் மகாதீரின் படம் மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
