Site icon அநேகன்

செந்தூல் கம்போங்கோவில் ஹிலிரில் தீ: 13 வீடுகள் சேதம்

கோலாலம்பூர், ஆக.24-
செந்தூல், கம்போங் கோவில் ஹிலிரில் இன்று காலை மணி 5.30 அளவில் திடிரென ஏற்பட்ட தீ விபத்தில் 13 வீடுகள் முற்றாக சேதமடைந்தன. சுமார் 30 பேர் பாதிப்பிற்கு இலக்காகினர்.

இச்சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பட்ட தகவலை தொடர்ந்து செந்தூல், ஜாலான் ஹங் துவா, கேஎல்சிசி, சௌ கிட், செராஸ் ஆகிய 5 தீயணைப்பு நிலையங்களிலிருந்து சுமார் 40 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவின் தலைவர் சம்சூல் மாரிப் சைபானி தெரிவித்தார்.

அவர்கள் அனைவரும் அப்பகுதியை சென்றடைந்த போது வீடுகள் எரிந்து கொண்டிருந்தன. கடுமையான போராட்டத்திற்கு பிறகு தீயை தீயணைப்பு வீரர்கள் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக அவர் கூறினார்.

இந்த தீ சம்பவம் நிகழ்ந்ததற்கான காரணம் குறித்து விசாரணையை மேற்கொள்ளப்பட்டு வருவதாக் சம்சூல் குறிப்பிட்டார். இதனிடையே, இந்த தீ சம்பவத்தில் தனது வீட்டை இழந்துள்ளது வேதனையளிப்பதாக 8 ஆண்டுகள் இங்கு காய்கறி கடையில் வேலை செய்து வரும் தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் ராஜ் (வயது 32) என்பவர் கூறினார்.

Exit mobile version