Site icon அநேகன்

மலேசியா, இந்தோனேசியா ரசிகர்கள் பிரச்சினையில் ஈடுபடாதீர் !

பெட்டாலிங் ஜெயா, ஆக.25 –

2017 சீ விளையாட்டுப் போட்டியின் கால்பந்துப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் நாளை இரவு மலேசியாவும் , இந்தோனேசியாவும் களம் காணவுள்ளன. ஷா ஆலாம் அரங்கில் நடைபெறவுள்ள இந்த ஆட்டத்தில் இரு தரப்பு ரசிகர்களும் எந்த ஒரு பிரச்சினையிலும் ஈடுபட வேண்டாம் என 22 வயதுக்கு உட்பட்ட மலேசிய கால்பந்து அணியின் பயிற்றுனர் டத்தோ ஓங் கிம் சுவி கேட்டு கொண்டுள்ளார்.

பரம வைரிகளான இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை என ஓங் கிம் சுவி தெரிவித்தார். எனினும் கால்பந்து ஆட்டத்தை நட்புறவுடன் அணுக வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார். இரண்டு நாடுகளுக்கு இடையிலான அணுக்கமான உறவை புலப்படுத்தும் வகையில் ரசிகர்கள் நடந்து கொள்ள வேண்டும் என ஓங் கிம் சுவி தெரிவித்தார்.

2017 சீ விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில் வழங்கப்பட்ட நினைவுப் புத்தகத்தில் இந்தோனேசிய கொடி தலை கீழாக அச்சிடக்கப்பட்டது பெரும் சர்ச்சையாக விசுவரூபமெடுத்தது.

இந்த விவகாரம் தொடர்பில் இளைஞர் விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின் மன்னிப்பு கோரியிருந்தாலும் இந்தோனேசியர்களில் ஒரு தரப்பினர் மலேசிய கொடியை எரித்து ஆர்பாட்டம் செய்திருந்தனர். இந்த விவகாரம் அரையிறுதி ஆட்டத்தில் எதிரொலிக்க கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Exit mobile version