Site icon அநேகன்

இணையத்தை தெறிக்கவிடும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 2.0 மேக்கிங் வீடியோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையமைப்பில் உருவாகிவரும் எந்திரனின் 2ஆம் பாகமான 2.0 படத்தின் மேக்கிங் வீடியோவை அதன் தயாரிப்பு நிறுவனமான லைக்கா இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

தனது படங்களில் பிரமாண்டமான காட்சிகளை வைப்பதில் கைத்தேர்ந்தவரான ஷங்கர் இப்படத்திலும் ரசிகர்களுக்கு பிரமாண்ட காட்சியமைப்புகளை வைத்துள்ளதை இந்த வீடியோ காட்டுகின்றது. இந்த வீடியோவை பார்த்த வலைத்தளவாசிகள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Exit mobile version