Site icon அநேகன்

சிலாங்கூரில் 42 தொகுதிகளில் போட்டியா? பாஸ்க்கு மரண அடி விழும்!

உலு கிந்தா, ஆக.25-
வருகின்ற பொதுத்தேர்தலில் பாஸ் கட்சி 42 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டால் அக்கட்சிக்கு மரண அடி விழும் என பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிஸா வான் இப்ராஹிம் எச்சரித்தார்.

அக்கட்சியின் கொள்கைகள் அம்னோவுக்கு ஆதரவளிக்கும் வகையில் இருந்தால் பல்லின வாக்காளர்கள் கொண்ட தொகுதிகள் மட்டுமின்றி மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதிகளிலும் அக்கட்சிக்கு ஆதரவு கிடைக்காது என அவர் கூறினார்.

வருகின்ற பொதுத்தேர்தலில் மும்முனை போட்டியை எதிர்கொள்ள பாஸ் தயாராக இருப்பதாக அதன் சிலாங்கூர் ஆணையர் சாலேஹான் முக்யி அறிக்கை வெளியிட்டது தொடர்பில் செய்தியாளர்கள் வினவிய போது வான் அசிஸா மேற்கண்டவாறு கருத்துரைத்தார். கடந்த 13ஆவது பொதுத்தேர்தலில் சிலாங்கூரில்  பாஸ் கட்சி 15 தொகுதிகளைக் கைப்பற்றியது.

Exit mobile version