கோலாலம்பூர் நவ. 1-
மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் உரிமையாளரும் சமூக சேவையாளர் டத்தோ அப்துல் மாலிக் இவ்வாண்டு 100 பேர் இலவசமாக உம்ரா பயணம் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.
கடந்த ஆண்டு வசதி குறைந்த 50 பேரை இலவசமாக உம்ரா பயணத்திற்கு அவர் அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டு அந்த எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. வசதி குறைந்த இந்திய முஸ்லிம்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தங்களின் வாழ்க்கையில் ஒரு முறையாவது உம்ரா பயணத்தை மேற்கொண்டு, இறைவனை தொழ வேண்டும் என முஸ்லிம்கள் விரும்புகிறார்கள். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இந்த நடவடிக்கையை டத்தோ அப்துல் மாலிக் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்.
இம்முறை 100 பேர் இந்த உம்ரா பயணத்தில் பயன் பெறுவதற்கு வாய்ப்புள்ளது. மேல் விவரங்களுக்கு கீழ்காணும் எண்களில் தங்கள் முழு விவரங்களை வாட்ஸ்அப் செய்யலாம். 918489860771

