Site icon அநேகன்

தஞ்சோங் பியாய் இடைத்தேர்தல்; 6 முனை போட்டி

பொன்தியான், நவம்பர் 2-

எதிர்வரும் நவம்பர் 16ஆம் தேதி நடைபெறவிருக்கும் தஞ்சோங் பியாய் தொகுதியின் இடைத் தேர்தலில் 6 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்த இடைத் தேர்தலில், நம்பிக்கைக் கூட்டணி சார்பில்,  பெர்சத்து கட்சியின் கர்மைனி சர்டினி போட்டியிடும் வேளையில் தேசிய முன்னணி சார்பில் டத்தோஸ்ரீ டாக்டர் வீ ஜெக் செங்,    கெராக்கா சார்பில் வேண்டி சுப்ரமணியம் ஆகியோர்   போட்டியிடுகின்றனர்.

இதனிடையே, பெர்ஜாசா கட்சியின் சார்பில் அதன் தலைவர் பட்ரூல்ஹிஷாம் அப்துல் அசிஸ் போட்டியிடும் வேளையில் சுயேட்சை வேட்பாளர்களாக டாக்டர் அங் சுவான் லோக், பரிடா அர்யானி அப்துல் கபார் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.

வேட்புமனு தாக்கல் காலை 10 மணி அளவில் முடிவடைந்தது. வேட்புமனு தாக்கல் முடிவடைவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே வேட்பாளர்கள் வேட்புமனுவை சமர்பித்தனர்.

கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி டாக்டர் முகமட் பாரிட் காலமானதை தொடர்ந்து தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற தேர்தல் நவம்பர் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Exit mobile version