Site icon அநேகன்

காடுகளின் பாதுகாப்பு சிறபம்சங்களை வெளிப்படுத்துவோம் – டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

கோலாலம்பூர், நவம்பர் 6-

நாட்டிலுள்ள காடுகளை பாதுகாப்பது மிகப் பெரிய கடமை என்பதை மற்ற நாடுகளுக்கு மலேசியா குரல் எழுப்ப வேண்டும். நம் நாட்டு காடுகளை பாதுகாப்பதில் நாம் அதிக வெற்றிகளை சந்தித்திருக்கிறோம்.

நாட்டின் காடுகள் எந்தளவிற்கு பாதுகாக்கப்படுகின்றன என்பதும் அவற்றால் ஏற்படும் பயன்களும் வெளிநாட்டவர்கள் அதிகம் அறிந்திருக்கவில்லை என்று நீர், நிலம், இயற்கைவள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள காடுகளின் பாதுகாப்பிற்கு நிறைய நடவடிக்கைகள் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அவை அனைத்தையும் வெளிபடையாகவும் விளம்பரப்படுத்தியும், பெருமிதமாகவும் உலகிற்கு வெளிபடுத்தவில்லை என்று அவர் கூறினார்.

அதன் காரணத்தால், வனவியல் மேம்பாட்டில் மலேசியா பின்தங்கியிருக்கலாம் என்று அவர் சுட்டிக் காட்டினார்.

மலேசிய வனவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் பாரம்பரிய பூங்காவை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.

இன்று வரை நாடு 55.48 விழுக்காடு வனப்பகுதியை கொண்டுள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.

இது தொடர்பாக பல்லுயிர் மற்றும் ஆசிய பசிபிக் பொருளாதார ஒருமைப்பாடு எனும் ஆசியான் மாநாட்டை மலேசிய தலைமையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நம் நாட்டின் வனப்பகுதிகளின் பாதுகாப்பை பற்றி மற்ற நாட்டிற்கு எடுத்துரைப்பதற்கு இது சிறந்த தளமாக அமையும்.

Exit mobile version