கோலாலம்பூர், நவம்பர் 7-
ஆசியாவில் மலேசிய புலிகளை பாதுகாப்பது மீதான மிக பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஏர் ஆசியா நமது மலேசிய புலிகளைக் காப்போம் எனும் பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.
நீர், நிலம், இயற்கைவள அமைச்சின் ஆதரவில் நடைபெறும் இந்தப் பிரச்சாரத்தை அதன் அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார், ஏர் ஆசியா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டோனி பெர்னாண்டர்ஸ், மலேசிய ஏர் ஆசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ரியாட் அஸ்மாட் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தவிருக்கின்றனர்.
இந்நிகழ்வு எதிர்வரும் நவம்பர் 12ஆம் தேதி இரவு 7.00 மணியளவில் சிப்பாங் ஏர்கிராப்ட் எஞ்சினியரிங், ஜாலான் கேஎல்ஐஏவில் நடைபெறவுள்ளது.
மலேசிய புலிகளை பாதுகாக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்குபடி ஏற்பாட்டுக் குழுவினர்கள் கேட்டுக் கொண்டனர்.

