கோலாலம்பூர், ஆக.26 –
பெண்களின் பங்கேற்பு இல்லாமல் மலேசியா உலகளாவிய வெற்றிகளை அடைந்திருக்க முடியாது என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
2010 ஆம் ஆண்டில் அரசாங்கம் பொருளாதார உருமாற்றுத் திட்டத்தை அறிவித்தப் பிறகு நாட்டில் பெண்களின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வந்திருப்பதாக அவர் சொன்னார்.
மலேசியாவின் வெற்றிக்கு பெண்களும் பங்காற்றியுள்ளனர் என்பதை உலக வங்கி , அனைத்துலக நிதியகமும் ஒப்புக் கொண்டிருப்பதாக நஜிப் தெரிவித்தார்.
அந்த இரண்டு அமைப்புகளில் அங்கீகரித்தின் வழி நாட்டின் மேம்பாட்டில் பெண்கள் முக்கிய பங்கை வகிக்கின்றனர் என்பதை நிரூபிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.
பெண்களின் சமூக பொருளாதார மேம்பாட்டில் மலேசியா சரியான தடத்தில் பயணிப்பதை அண்மையில் நிக்கே ஆசியான் வெளியிட்ட ஆய்வுகள் காட்டுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பிரதமர்துறையின் மகளிர் புத்தாக்க பயிற்சி கழகத்தை தொடக்கி வைத்த நிகழ்ச்சியில் உரையாற்றியபோது நஜிப் இவ்வாறு தெரிவித்தார்.
மைவின் என்றழைக்கப்படும் இந்த கழகத்தின் ஆலோசக வாரியத்தின் தலைமைப் பொறுப்பை தாமே ஏற்று கொள்ளவிருப்பதாக நஜிப் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் லிம் கோக் விங் பல்கலைகழகத்தின் தோற்றுநர் டான் ஸ்ரீ லிம் கோக் விங் துணைத் தலைவராக செயல்படுவார் என்றும் அவர் கூறினார்.
