Site icon அநேகன்

தஞ்சோங் பியாய்: கோபத்தின் அடிப்படையில் வாக்களிக்காதீர்!

குக்கூப், நவ.14-

சனிக்கிழமை நடைபெறவிருக்கும் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ர தொகுதிக்கான இடைத்தேர்தலில், வாக்காளர்கள் கோபத்தின் அடிப்படையில் வாக்களிக்கக்கூடாது.

மாறாக, பக்காத்தான் ஹராப்பானின் வேட்பாளர் ஹாஜி கர்மாய்ன் சார்டினிக்கு வாக்களிப்பதால் கிடைக்கவிருக்கும் நன்மைகளைக் கருத்தில்கொண்டு வாக்களிக்க வேண்டுமென அதன் தலைவரான துன் டாக்டர் மகாதீர் முகமட் வலியுறுத்தியுள்ளார்.

புதன்கிழமை இரவு கூக்குப் லாவுட் இரவு சந்தையின் இடத்தில் நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் பிரச்சார கூட்டத்தில், கலந்துக்கொண்ட அவர் அக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

நமக்கு சேவையாற்ற முடியாதவருக்கு வாக்களித்தால் நமக்குத்தான் இழப்பு, அவர்களுக்கு பணம் கிடைக்கும். நமக்கு என்ன கிடைக்கும்? என அந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சுமார் இரண்டாயிரம் பேரின் முன்னிலையில், பிரதமருமான துன் டாக்டர் மகாதீர் கேள்வியெழுப்பினார்.

எனவே, அந்த இடைத்தேர்தலில் மத்திய அரசாங்கத்துடன் நெருக்கமாக இருக்கக்கூடிய வேட்பாளருக்கு வாக்களிக்கும்படி அவர் வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version