Site icon அநேகன்

தமிழர் மேம்பாட்டிற்கு வித்திடும் எழுமின் மாநாடு!

சென்னை, நவ. 14-

உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் மூன்றாம் உலகத் தமிழ் தொழிலதிபர்கள், திறனாளர்கள் மாநாடு (எழுமின்) சென்னையில் கோலாகலமாக தொடங்கியது.

35 நாடுகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்ட இந்த மூன்று நாள் மாநாட்டில் மலேசியாவிலிருந்து 60க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக பரிமாற்றங்கள், வர்த்தக மேம்பாடு, தமிழர்களின் பொருளாதார வளர்ச்சி குறித்த பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளும் இந்த மாநாட்டில் இடம்பெறுகின்றன. குறிப்பாக வர்த்தக பரிமாற்று தளமாக இந்த எழுமின் மாநாடு அமைகின்றது.

மாநாடு மட்டுமின்றி கருத்தரங்குகளும் கண்காட்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. தமிழர் வளர ஒருவருக்கொருவர் துணை நிற்க வேண்டும் என்பதே எழுமின் இயக்கத்தின் தாரக மந்திரமாகும். இரண்டாவது மாநாடு கோலாலம்பூர் சைபர் ஜெயாவில் மிக விமர்சையாக நடந்தது, மலேசிய எழுமின் இயக்கத்தின் மலேசிய தலைவரும் தேசிய இயக்கத்தின் உதவி தலைவருமான சரவணன் இந்த மாநாடு குறித்த விவரங்களை விளக்கினார்.

நவம்பர் 14,15,16 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த மாநாடு தமிழர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு வித்திடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

இதில் மனிதவள அமைச்சர் குலசேகரனின் சிறப்பு அதிகாரி தியாகராஜன், பேரா மாநில மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரி நோவிந்தன், மலேசிய இந்திய காங்கிரசின் முன்னாள் உதவி தலைவர் டத்தோ வி.எஸ்.மோகன், மை ஸ்கில் அறவாரியத்தின் தோற்றநர் வழக்கறிஞர் பசுபதி உட்பட பல பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர்.

Exit mobile version