Site icon அநேகன்

தே.முன்னணியின் பெரும்பான்மை  அதிர்ச்சியளிக்கிறது! -டத்தோஸ்ரீ அன்வார்

கோலாலம்பூர், நவ.17-

தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ டாக்டர் வீ ஜெக் செங் பெற்ற பெரும்பான்மை வாக்குகள் அதிர்ச்சியளிப்பதாக பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

இந்த இடைத் தேர்தலில் அடைந்த தோல்வியை பக்காத்தான் ஹராப்பான் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“இத்தேர்தலில் எதிர்க்கட்சி பெற்ற பெரும்பான்மை அதிர்ச்சியளிக்கிறது. அதோடு, ஒட்டுமொத்த பக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவத்திற்கும் இது ஒரு தெளிவான பாடமாகவும்  அமைந்துள்ளது” என்றார் அன்வார்.

“இந்த இடைத் தேர்தல் முடிவில் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்” என்று அவர் மேலும் சொன்னார்.

வாக்குறுதிகளை ஆக்ககரமான வகையில் நிறைவேற்றுவதன் வழி பக்காத்தான் ஹராப்பான் கொள்கைகள் குறித்து மக்கள் மனதில் நாம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்” என்று சமூக வளைத்தள செய்தியில் குறிப்பிட்டார்.

இந்த நாடாளுமன்றத் தொகுதியில் 15,086 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்ற ம.சீ.ச வேட்பாளர் வீ ஜெக் செங்கிற்கு அன்வார் பாராட்டு தெரிவித்தார்.

பாக்காத்தான் ஹராப்பான் வெறும் 26.74 விழுக்காடு வாக்குகளையேப் பெற்ற வேளையில் தேசிய முன்னணி ஒட்டு மொத்த வாக்குகளில் 65.61 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் கெராக்கான்,பெர்ஜாசா மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தங்கள் வைப்புத் தொகையை இழந்தனர்.

தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ டாக்டர் வீ ஜெக் செங் 25,466 வாக்குகளுடன்வெற்றி பெற்ற வேளையில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பக்காத்தான்ஹராப்பான் வேட்பாளர் கார்மானி சார்டினி 10,380 வாக்குகளைப் பெற்று தோல்வி கண்டார்.

இத்தேர்தலில் களம் இறங்கிய இதர வேட்பாளர்களான  கெராக்கானின் வெண்டி சுப்ரமணியம் (1,707 வாக்குகள்), பெர்ஜாசா வேட்பாளர் டத்தோ டாக்டர் பட்ருல்ஹிஷாம் அப்துல் அஜிஸ் (850 வாக்குகள்), உள்ளூர்வாசிகளான ஆங் சுவான் லோக் (380 வாக்குகள்) மற்றும்  ஃபாரிடா அர்யானி அப்துல்  (32 வாக்குகள்) ஆகியோர்  தோல்வி கண்டனர்.

Exit mobile version