அம்பாங், நவ.17-
தீபாவளி போன்ற பொது உபசரிப்பு நிகழ்ச்சிகள் நாட்டிலுள்ள பல்லின மக்களிடையே நல்லுறவையும் நல்லிணக்கத்தையும் வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன என்று லெம்பா ஜெயா சட்டமன்ற உறுப்பினர் அனிஸா தல்கா தெரிவித்தார்.
தீபாவளி என்பது நன்மைகளின் வெற்றியைக் கொண்டாடும் திருநாளாகும்.இந்த நாளையொட்டி ஏற்பாடு செய்யப்படும் பொது உபசரிப்புகள் நல்ல சிந்தனைகளையும் உயர் லட்சியத்தையும் மனதில் விதைக்கும் என்பது திண்ணம் என்று இங்கு அம்பாங் நாடாளுமன்றம், புக்கிட் அந்தாராபாங்சா மற்றும் லெம்பா ஜெயா சட்டமன்றம் இணைந்து ஏற்பாடு செய்த தீபாவளி பொது உபசரிப்பு நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றுகையில் குறிப்பிட்டார்.
மாதவன் வீராசாமி தலைமையில் ரகுநாதன், பாலு ஸ்ரீ, டாக்டர் திரு, தேவி, சிவகாமி உள்ளிட்ட பல பொறுப்பாளர்களின் ஒத்துழைப்போடு நடைபெற்ற இந்நிகழ்ச்சியை இந்திய கிராமத் தலைவர் நடேசன் வரதன் செவ்வனே வழிநடத்தினார்.
வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர் ஜூரைடா கமாருடின் மற்றும் பொருளாதார
பல்சுவை உணவுடன் கூடிய இந்தத் தீபாவளி பொது உபசரிப்பு நிகழ்ச்சியில் அம்பாங் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பல்லின மக்கள் உட்பட 1,000திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

