Site icon அநேகன்

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சாதனை தொடரட்டும் – டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார்

கோலாலம்பூர், நவம்பர் 21-

யூபிஎஸ்ஆர் தேர்வில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் அடைவு நிலை தம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாக நீர், நிலம், இயற்க்கைவள அமைச்சர் டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

மற்ற இன பள்ளிகளை காட்டிலும் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சிறந்த தேர்ச்சி பெற்றிருப்பது மக்களுக்கு தமிழ்ப்பள்ளிகளின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, அடுத்தாண்டு தமிழ்ப்பள்ளிகள் நம் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மாணவர்களின் இந்த அடைவு நிலைக்கு முக்கிய காரணமாக இருந்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினருக்கும் அவர்களது கல்விக்கு ஆதரவாக இருத்த அனைத்து தரப்பினருக்கும் தமது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

நம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உள்ளூரில் மட்டுமின்றி அனைத்துலக ரீதியில் நடைபெறும் போட்டிகளிலும் கலந்து கொண்டு பள்ளிக்கும் சமுதாயத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ளனர். இவர்களின் இந்த வெற்றிப் பயணம் தொடர வேண்டும். அவர்களுக்கு ஆதாரவாக இருந்து வரும் அனைத்து தரப்பினரும் தொடர்ந்து அவர்களுக்கு ஆதரவி வழங்கி வரவேண்டும் என்று டத்தோ டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கேட்டுக் கொண்டார்.

Exit mobile version