கோலாலம்பூர், நவ.25-
பி.கே.ஆர் கட்சியிலிருந்து ஜக்காரியா அப்துல் ஹாமிட் நீக்கப்பட்டது குறித்து, அதன் உதவித் தலைவரான ஸூராய்டா கமாருடின் கடுமையாக சாடியிருந்தார்.
அவரது அக்கருத்து குறித்து கருத்துரைத்த பி.கே.ஆரின் தொடர்பு பிரிவு இயக்குநரான ஃபாமி பாட்சில், ஜக்காரியா மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மேற்கொண்டுவரும் விசாரணைக் குறித்து, நேற்றைய கட்சிக்கூட்டத்தில் முழுமையாக விவாதிக்கப்பட்டதாக கூறியிருந்தார்.
மேலும், அக்கூட்டத்தில், ஸூராய்டா கலந்துக்கொண்டிருந்தால், ஜக்காரியா எதற்காக நீக்கப்பட்டார் என்ற காரணம் அவருக்கு நன்கு புரிந்திருக்கும் என்றும் ஃபாமி குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், ஃபாமியின் அக்கருத்து நகைப்பிற்குரியது என கூறியிருக்கும் ஸூராய்டா, கட்சியில் அவர் நியமனம் செய்யப்பட்ட அதிகாரி மட்டுமே. மேலும், தாம் கூற வந்த கருத்தை புரிந்துக்கொள்வதற்கான முதிர்ச்சியை ஃபாமி கொண்டிருக்க வேண்டுமெனவும் அவர் பதிலடி கொடுத்துள்ளார்.
ஜக்காரியாவின் நீக்கம் தொடர்பான விவகாரத்தில், தாம் கட்சிக் கூட்டத்திற்கு வந்தேனா இல்லையா என்பதற்கும் சம்பந்தமில்லை. தன்னுடைய கருத்தை ஃபாமி புரிந்துக்கொள்ளாததையே அவரது கருத்துக்கள் காட்டுகின்றன. சரியான முறையில், ஜக்காரியா கட்சியிலிருந்து நீக்கப்படவில்லை.
பி.கே.ஆரின் உறுப்பினர்கள் மீதான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில், கட்சியின் கொள்கைகள் பாதிக்கப்படக்கூடாது என ஸூராய்டா கூறியுள்ளார்.

