Site icon அநேகன்

பேராவின் புதிய முதல்வர் : அம்னோவும் பெர்சத்துவும் இணையும் புதிய கூட்டணி

IPOH, 5 Dis -- Menteri Besar Perak Datuk Seri Ahmad Faizal Azumu mengumumkan meletak jawatan sebagai Menteri Besar Perak bersama-sama seluruh barisan Ahli Majlis Mesyuarat Kerajaan Negeri selepas gagal memperoleh sokongan dalam usul keyakinan ahli Dewan terhadap Menteri Besar dalam persidangan Dewan Undangan Negeri (DUN) semalam pada sidang media di Laman Seri Ridzuan, Ipoh hari ini. -- fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA

ஈப்போ, திசம்பர் 7:-

பேரா மாநில பெர்சத்து அம்னோவுடன் இணைந்து புதிய கூட்டணியின் ஆட்சியமைக்கும் என அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் டத்தோ ஶ்ரீ அகமாட் ஃபைசால் அசுமு தெரிவித்துள்ளார்.

“மாநில நிலையிலும் தேசிய நிலையிலும் பல கட்சிகளின் ஒத்துழைப்புடன் ஆட்சி அமைத்திருக்கிறோம். அதற்காக அம்னோ உட்பட எந்தக் கட்சியுடனும் இணைந்து செயல்படவும் தயாராக் உள்ளோம்,”

என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

59 சட்டமனறத் தொகுதிகளைக் கொண்ட பேரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க குறைந்த்து 30 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

தற்போதைய நிலவரப்படி, அம்னோவிடம் 25 தொகுதிகளும், ஜ.செ.க.விடம் 16 தொகுதிகளும், பெர்சத்து 5, அமானா 5, பி.கே.ஆர். 3, பாஸ் 3, கெராக்கான் 1, சுயேட்சை 1 என்ற வரிசையில் அமைந்துள்ளது.

ருங்குப் சட்டமன்ற உறுப்பினர் ட்த்தோ ஷாரும் ஸாமான் யாஹ்யாவை பேரஆ மாநில முதல்வராக்கினால், அம்னோ பெர்சத்துவுடன் இணைந்து செயல்பட (ஆட்சியமைக்க) தயாராக இருப்பதாக அம்னோவின் நம்பத்தகுந்த வட்டாரம் தெரிவிக்கின்றது.

மேலும், அகமாட் ஃபைசால் அசுமு மீதான நம்பிக்கையில்லாத தீர்மானத்தைக் கொண்டு வந்து பேரா மாநில ஆட்சி கவிழ்ந்ததற்கு பேரா அம்னோ தொடர்புக்குழுத் தலைவர் டத்தோ சாராணிதான் காரணகர்த்தா எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் பேரா மாநில அம்னோ டத்தோ சாராணி முகம்மாட்டை அம்மாநிலத்தின் 14வது முதல்வருக்கானப் பரிந்துரையாக அறிவித்தார்.

தனது சமூக ஊடகப் பக்கமான முகநூலில் அவ்வாறு அறிவித்திருந்தார். பேரா மக்கள் எவ்வித வதந்திக்கும் இடம் கொடுக்காமல் இருப்பதற்கும் பேரா மாநில ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் ஷாவின் இறூதி முடிவுக்குக் காத்திருக்குமாறு அதன் வழி கேட்டுக்கொண்டார்.

பேரா மாநிலத்தில் ஆட்சியமைக்க புதிய கூட்டணி அமைக்கப்படுவது குறித்து நிராகரிக்கும் வகையில். நேற்று அம்னோவின் தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ அகமாட் ஸாஹின் ஹமிடி எவ்விதக் கருத்தும் தெரிவிக்கவில்லைவ்

ஆனால், பேரா மாநில பெர்சத்து தரப்பில் இருந்து தேசியக் கூட்டணீயை ஆதரிக்கும் எந்த முடிவையும் இன்னும் எடுக்க வில்லை எனவும் தெரிவிக்கப்படவில்லை.

ஷாருல் ஸாமானை பேரா மாநில முதல்வராக்கும் எவ்வித நிபந்தனையையும் வைக்கவில்லை என நியூஸ் ஸ்ட்ரேயிட் டைம்ஸ் அவர்களைத் தொடர்பு கொண்ட போது தெரிவித்துள்ளனர்.

Exit mobile version