Site icon அநேகன்

சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்திக்கிறார் டத்தோ ஶ்ரீ அகமாட் ஸாஹிட் ஹமிடி

ஈப்போ, திசம்பர் 7:-

பேரா மாநில அரசியல் நெருக்கடி தொடர்பாக அம்னோவின் நிலைப்பாடு குறித்து நாளை காலை 10.00 மணி அளவில் சுல்தான் நஸ்ரின் ஷாவை அக்கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ அகமாட் ஸாஹிட் ஹமிடி சந்திக்கவிருக்கிறார்.

பேரா, பாகான் ட்ததோ தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் நேற்று பேரா அம்னோ தொடர்புக் குழுவின் சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

பெர்சத்து கட்சியைச் சேர்ந்த அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ட்த்தோ ஶ்ரீ அகமாட் ஃபைசால் அசுமுவுக்கு எதிராக சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் அவர் தனக்கானப் பெரும்பான்மை ஆதரவைப் பெறத் தவறியதால் கடந்த வெள்ளிக்கிழமை பேரா மாநில அரசு கவிழ்ந்தது.

அத்தருணம் தொடங்கி இன்றூ வரை பேரா மாநிலத்தில் தற்சமயம் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Exit mobile version