Site icon அநேகன்

பேரா புதிய முதல்வர் யார் ? சுல்தான் அறிவிப்பார் ! – ஸாஹிட்

ஈப்போ, திசம்பர் 8 :-

“இறைவன் அருளால் பெரும்பான்மை ஆதரவு உண்டு” எனும் அம்னோ தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ அகமாட் ஸாஹிட் ஹமிடியின் சுருக்கமான பதிலின் வழி அம்னோவிலிருந்து தான் பேரா மாநிலத்தின் புதிய ஆட்சியமைப்பு இருக்கும் என்ற பிம்பத்தை உருவாக்கியுள்ளது.

இன்று காலை கிந்தா அரண்மனையில் சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடன் அவர் அவ்வாறு கூறினார்.

“பேரா மாநில ஆட்சியாளரான சுல்தான் நஸ்ரின் ஷாவை சந்தித்து அம்மாநில முதல்வர் பெயரைப் பரிந்துரைக்கும் கடிதத்தை வழங்கினேன். இருந்தாலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பை சுல்தான் தான் வெளியிடுவார்.”

இம்முறை புதிய கூட்டணி உண்டா என வினவியபோது, “முடிந்தவரை தேசியக் கூட்டணியைத் தக்கவைக்கத்தான் முயற்சிக்கிறோம். அதன்படி, அம்னோ, பாஸ், பெர்சத்து கட்சிகளின் கூட்டமைப்பையே தொடர்கிறோம்” எனத் தெரிவித்தார்.

பரிந்துரைத்த பெயர் பற்றி கேட்டபோது அவர் அதற்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

Exit mobile version