Site icon அநேகன்

மலேசிய இந்து சங்கம் இன்னும் இருப்பதற்கான அவசியம் இருக்கிறதா ? – பேராசிரியர் இராமசாமி

ஜோர்ஜ்டவுன், திசம்பர் 8:-

கடந்த சில நாட்களாக ம.இ.கா. தலைவர்களும் ஜ.செ.க. தலைவர்களும் கெடா மாநிலத்தில் உடைக்கப்பட்ட இந்துக் கோவில்கள் தொடர்பாகப் போராடி வருகிறார்கள். சில மாத இடைவெளிக்கு நடுவில் தொடர்ச்சியாக இரன்டு கோவில்கள் உடைக்கப்பட்டுள்ளன. ஒன்று மோட்டார்சைக்கிள் நிறுத்துமிடம் கட்டுவதற்கும் மற்றொன்றை காற்பந்து மைதானம் கட்டுவதற்கும் உடைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

அவ்விரு கோவில்களும் சட்டத்திற்குப் புறம்பாக கட்டப்பட்டுள்ளதால் தான் உடைக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் முகம்மாட் சனுசி நோர் தெரிவிக்கிறார்.

இவ்விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிட ம.இ.கா.வின் தலைவர்களையும் ஜ.செ.க. தலைவர்களையும் மது போதயில் உளறுகிறார்கள் எனக் கூறி அவமானப் படுத்தி இருக்கிறார்.

கோவில் உடைப்பு விவகாரம் இன்னும் சூடு அடங்கவில்லை. ஆனால், இதற்கிடையில் மலேசிய இந்து சங்கத் தலைவர் மோகன் ஷான் கெடா மாநில பாஸ் ஆதரவாளர்கள் அலுவலகத்தில் இனவாதியான முகம்மாட் சனுசியுடன் பேச்சு வார்த்தை நடத்த நுழைந்திருக்கிறார்.

இவ்விவகாரத்தில் மலேசிய இந்து சங்கத்தின் உண்மையான பொறுப்பும் கடமையும் என்ன ?

“அராஜகத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும்!” என கடுஞ்சினத்தில் அறிக்கையை விட்டுவிட்டு இப்போது இந்த சாந்தப்படுத்தும் செயல்பாடு ஏன் ?

இந்தியர்களைக் களங்கப்படுத்திய முகம்மாட் சனுசிக்கு ஒத்து ஊதும் இந்த நடவடிக்கை அவசியம் தானா ?

மலேசிய இந்துக்களின் முதன்மை நிகராளி அமைப்பு என பார் தட்டிக் கொள்வதற்குப் பாதகமாக மலேசிய இந்து சங்கத்தின் நடவடிக்கை இருப்பது ஏன் ?

இது போன்ற நடந்து கொள்வதற்கு மலேசிய இந்து சங்கம் அவசியமா ? எனும் கேள்விகளை பேராசிரியர் இராமசாமி முன் வைத்துள்ளார்.

Exit mobile version