Site icon அநேகன்

தமிழுக்கு முக்கியத்துவம் அளித்த ட்விட்டர் நிறுவனம் – சாதனை படைத்த அமிதாப், விஜய், விராட் கோஹ்லி டிவீட்கள் !

டெல்லி, திசம்பர் 8:-

2020ம் ஆண்டின் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட டுவீட் என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வெளியிட்ட பதிவினை ட்விட்டர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது. அதை இந்தி, ஆங்கிலம் மட்டுமில்லாது தமிழிலும் ட்விட்டர் இந்தியா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது  இதில் சிறப்பு என்னவென்றால் இந்த ஆண்டு ட்விட்டர் இந்தியா தமிழுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. மிகவும் சிறப்பான விஷயமாக கருதப்படுகிறது. இந்தியாவில் பல மொழிகள் உள்ள நிலையில் ட்விட்டர் இந்தியா நிறுவனம் ஆங்கிலம் இந்திக்கு அடுத்தபடியாக தமிழிலும் கூறியுள்ளது. அமிதாப் ட்வீட் மட்டுமல்ல வீராட் கோலியின் ட்வீட் மற்றும் விஜய்யின் ட்வீட்யும் தமிழில் கூறியுள்ளது.

*2020ம் ஆண்டின் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட டுவீட் பதிவான அமிதாப் பச்சனின் பதிவினை 43 ஆயிரம் பேர் மேற்கொள் காட்டியிருபபதாக கூறியுள்ளது. அமிதாப்பின் ட்விட்டை மொத்தம் 4.43 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். 78 ஆயிரம் பேர் ரீட்வீட் செய்துள்ளனர்.

*அமிதாப் பச்சன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். என் குடும்பத்தினர். என்னிடம் பணியாற்றுபவர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. முடிவுகளுக்காக காத்திருக்கிறோம் கடந்த 10 நாட்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தயவு செய்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.

*நெய்வேலியில் ரசிகர்களுடன் நடிகர் விஜய் எடுத்த செல்ஃபி 2020ம் ஆண்டின் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட் என ட்விட்டர் இந்தியா அறிவித்துள்ளது.

அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருப்பதை வெளிப்படுத்தி விராட் கோஹ்லி வெளியிட்ட ட்வீட், 2020ம் ஆண்டின் அதிகம் லைக் செய்யப்பட்ட ட்வீட் என ட்விட்டர் இந்தியா அறிவித்துள்ளது.

*2020ம் ஆண்டில் அதிக ட்வீட்கள் பதிவிடப்பட்ட திரைப்பட ஹேஷ்டேக்-களில் #SooraraiPottru ஹேஷ்டேக் 2ம் இடத்தைப் பிடித்துள்ளது!

– நன்றி : தினகரன்

Exit mobile version