Site icon அநேகன்

கோவிட்-19 : இன்று 1,555 பேருக்கு நோய்த்தொற்று ! அறுவர் மரணம் !

புத்ராஜெயா | மார்ச் 2:- –

மலேசியாவில் இன்று 1,555 பேருக்குப் புதிதாக இந்நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 304,135-ஐ எட்டியுள்ளது.

இன்று கோவிட்-19 பெருந்தொற்றால் 6 பேர் பலியானர். அதனால் தற்போது மொத்த மரண எண்ணிக்கை இது வரையில் 1,141 ஆக உயர்ந்துள்ளது.

இது வரையில் 204 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 96 பேருக்கு சுவாச உதவிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சைக்குப் பின்னர் இன்று 2,528 பேர் குணமடைந்துள்ள வேளையில் 278,431 பேர் மொத்தமாக இந்நோயிலிருந்து விடுபட்டுள்ளனர்.

இந்தத் தகவலை சுகாதார அமைச்சின் இயக்குநர் தான் ஶ்ரீ டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா இன்றையச் செய்தியாளார் சந்திப்பில் வெளியிட்டார்.

Exit mobile version