Site icon அநேகன்

நாடாளுமன்றம் எப்போது கூடும்! அகமட் ஸாஹிட் கேள்வி

அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ அகமட் ஸாஹிட்

கோலாலம்பூர், மார்ச் 3-

நாடாளுமன்ற கூட்டத் தொடரை நடத்துவதற்கு மாமன்னரிடம் எப்போது அனுமதி கோரப்படுமென்ற கூற்றை அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ அகமட் ஸாஹிட் அமிடி முன்வைத்துள்ளார்.

நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு (MCO) காலகட்டத்தை நாம் கடந்துவிட்டோம். அனைத்து வணிகத் துறைகளும் செயல்படத் தொடங்கியுள்ளன என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

”நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு தற்போது நடப்பில் இல்லை. இச்சூழ்நிலையில் ஏறக்குறைய எப்போது நாடாளுமன்றம் கூடும்”. என்ற கேள்வியை அவர் தமது முகநூல் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

விதிமுறைகளுக்கு உட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு (CMCO) சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர், பினாங்கு ஆகிய மாநிலங்களில் மார்ச் 5 முதல் நடைமுறைக்கு வருகின்றது. அத்தருணத்தில் இதே நடைமுறை கெடா, கிளந்தான், நெகிரி செம்பிலான, சரவாக், பேரா ஆகிய மாநிலங்களிலும் தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பகாங், மலாக்கா, திரங்கானு, சபா, புத்ராஜெயா உட்பட லாபுவானின் மீட்டுநிலை நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு மார்ச் 5 முதல் அமல்படுத்தப்படவுள்ளது. பெர்லிஸில் இந்நிலை தொடருமென்றும் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தை நடத்துவதற்கு அனுமதி கோரலாம் என மாமன்னர் கூறிவிட்டார். தற்போது அவசரநிலை நடப்பிலிருந்தாலும், மக்களின் நன்மைக்காகவும் நாட்டின் மேம்பாட்டிற்காகவும் நாம் நாடாளுமன்ற கூட்டத்தை நடத்த வேண்டுமென பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினருமான அகமட் ஸாஹிட் தெரிவித்துள்ளார்.

Exit mobile version