Site icon அநேகன்

சுங்கை ஊலார் தோட்டத்தமிழ்ப்பள்ளி நில விவகாரம் : கெடா மாநில மந்திரி பெசாரின் இன்னொரு சித்து விளையாட்டா ?

கூலிம் | மார்ச் 3:-

கெடா கூலிமில் அமைந்துள்ள சுங்கை ஊலார் தோட்டத் தமிழ்ப்பள்ளி அமைந்திருக்கும் நிலம் பள்ளிக்கு இலவசமாக மாநில அரசாங்கம் வழங்காமல் மூன்று ஆண்டிற்கு மட்டும் இலவசமாக வழங்கி அதன்பிறகு, மீண்டும் அந்நிலத்தில் பள்ளி இருக்க வேண்டும் என்றால் அடுத்த மூன்று ஆண்டில் மீண்டும் கெடா மாநில மேம்பாட்டு நிறுவனத்திடம் விண்ணப்பம் செய்யவத்தோடு பல நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது அந்நிறுவனத்தின் ஒப்பந்தம்.

2010 ஆம் ஆண்டில் கெடா மாநில மந்திரி பெசாராக இருந்து வந்த உஸ்தாத் அஸிஸான் சுங்கை ஊலார் தோட்டத்தமிழ்ப்பள்ளிக்கு வேண்டிய நிலத்தை வழங்கி விட்டத்தாகவும் இந்த பள்ளியின் நிலம் பிரச்சனைத் தீர்க்கப்பட்டு விட்டத்தாகவும் கூலிம் பண்டார் பாரு நாடாளமன்ற உறுப்பினரும் முன்னால் உள்நாட்டு மற்றும் வாணிபத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுதியோன் தெரித்தார்.

ஆனால் மீண்டும் எதற்காக எந்த நோக்கத்திற்காக இப்பள்ளியின் நில பிரச்சனை கெடா மாநில மந்திரி பெசார் தோண்டிருக்கிறார் என்பதுத்தான் அறியாத ஒன்றாகவுள்ளது என்று அநேகன் ஊடகம் தெரிவித்தது.

அண்மையில் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுதியோன் சுங்கை ஊலார் தோட்டத்தின் நிலப் பிரச்சனைத் தொடர்பாக பள்ளியின் முன்பு சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்புக் கூட்டத்தில் மேற்கண்டவாறு கூறிப்பிட்டார் .

இந்த பிரச்சனைத் தொடர்பாக பள்ளிக்கு வருகையளித்த டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுதியோனை பள்ளியின் உள்ளே செல்ல அனுமதி வழங்காதத்தால் நிருபர்களின் சந்திப்பு பள்ளியின் நுழைவாயில் நடைபெற்றது .

1936 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட சுங்கை ஊலார் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் இன்று 173 மாணவர்கள் பயின்று வருகின்றன. 90% விழுக்காட்டு இந்தியர்கள் வாழ்ந்து வரும் சுங்கை ஊலார் தோட்டத்தில் ஒரு தமிழ்ப்பள்ளி இருப்பது அவசியமான ஒன்றாகும் . அந்த அடிப்படையில் இந்த பள்ளிக்கு இதற்கு முன்பே சுங்கை ஊலார் தமிழ்ப்பள்ளிக்கு நிலம் ஒதுக்கப்பட்டுவிட்டத்தாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், 2007 ஆம் ஆண்டில் சுங்கை ஊலார் நிலத்தை கெடா மாநில மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் சென்று விட்டது . அதில் இந்த சுங்கை ஊலார் தோட்டத் தமிழ்ப்பள்ளியும் அடங்கும் . அதுடன் 2008 ஆம் ஆண்டில் கெடா மாநிலத்தை பாஸ் கட்சி கைப்பற்றியது . அப்பொழுது கெடா மாநில மந்திரி பெசாராக உஸ்தாத் அஸிஸான் இருந்தார் . அந்த சமயத்தில் சுங்கை ஊலார் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் புதிய கட்டிட கட்டுவதற்கான முயற்சியில் முன்னால் பள்ளி நிர்வாகமும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் முயற்சியில் இருந்து வந்தன.

2008 ஆம் ஆண்டில் தொடங்கி பள்ளிக்கு புதிய கட்டிடத்திற்காக பல விதமான நடவடிக்கையில் இறங்கிய சமயத்தில் பள்ளி சார்பாக கல்வி அமைச்சுக்கு புதிய கட்டிடத்திற்கான வேண்டும் என்று கூறி கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது . அக்கடிதத்தின் பிரதிபலனாக புதிய கட்டிடம் கட்டுவதற்கு முதலில் நிலத்தின் உரிமையாளரின் அனுமதி பெற வேண்டும் . அப்படி அனுமதி கிடைத்தால் மட்டுமே இந்நிலத்தில் புதிய கட்டிடம் கட்டலாம் என்று கல்வி அமைச்சு பதில் அளித்திருந்தது.

ஏறக்குறைய 2010 ஆம் ஆண்டில் இருந்து வந்த பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் முன்னால் கெடா மாநில மந்திரி பெசாரும் Exco Tanah negeri Kedah மற்றும் கெடா மாநில மேம்பாட்டு நிறுவனத்தின் தலைமை இயக்குனர் பதவிகளைக் கைப்பற்றியிருந்த உஸ்தாத் அஸிஸானை நாடி நிலப்பிரச்சனை பற்றிய விளக்கத்தை பள்ளி நிர்வாகம் வழங்கினர்.

அந்த விளக்கத்தின் பிறகு, 1 வாரத்திற்குள் சுங்கை ஊலார் பள்ளி நிர்வாகம் புதிய கட்டிடம் எழுப்புவதற்கான விண்ணப்பத்தைக் கெடா மாநில அரசாங்கம் ஏற்றுக் கொண்டு அந்நிலம் சுங்கை ஊலார் பள்ளி முழுமையாக இலவசமாக வழங்கப்பட்டிருப்பத்தாக டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுதியோன் முன்னால் ஆட்சி குழு உறுப்பினரான இருந்து வந்த டத்தோ மணிகுமாரிடம் கலந்துப் பேசிய பொழுது கிடைத்த விளக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து , டத்தோ ஸ்ரீ சைஃபுடின் கூறுகையில் ஒரு பள்ளியில் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்றால் பல அரசாங்க இலாகாவின் அனுமதி கடிதங்களும் விதிமுறைகளுக்குப் பின்புத்தான் ஒரு அரசாங்க பள்ளி புதிய கட்டிடம் எழுப்ப முடியும் . இதனை அனைத்தும் பெற்ற பிறகே சுங்கை ஊலார் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 2012 ஆம் ஆண்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டிருக்கின்றது.

அப்படியென்றால் சுங்கை ஊலார் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு முன்னால் அரசாங்கம் நிலம் வழங்கிருப்பது உண்மையான ஒன்றாகும் . அதனால் இப்பொழுது இருந்து வரும் கெடா மாநில மந்திரி பெசார் முகமட் சனுசி நோர் மற்றும் சுங்கை ஊலார் தோட்டத் தமிழ்ப்பள்ளயின் வாரியக் குழுவும் 10 ஆண்டிற்கு முன்னதாகவுள்ள நிலத்தின் கடிதங்கள் மற்றும் அதன் சார்ந்த ஆதாரங்கள் அனைத்தும் கண்டிப்பாக பள்ளி நிர்வாகத்திடம் அதன் சார்ந்த இலாகாவிடம் மீண்டும் கேட்டறிந்த பின்புத்தான் இப்பொழுது உள்ள மாநில மந்திரி பெசார் முடிவு எடுத்திருக்க வேண்டும் என்றார் சைஃபுடின் நசுதியோன்.

ஆகவே, இந்நிலத்தை மீண்டும் பள்ளிக்கே இலவசமாக வழங்குவதற்கு மாநில மந்திரி பெசார் முன் வர வேண்டும் அதற்கான கடிதத்தை கூலிம் பண்டார் பாரு நாடாளமன்ற சார்பில் மாநில அரசாங்கத்திற்கு அனுப்ப இருப்பதாக சைஃபுடின் கூறினார்.

அக்கடிதத்திற்கு மாநில அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் கெஅடிலான் கட்சியும் கூலிம் பண்டார் பாரு நாடாளமன்றமும் இந்நிலத்தின் வாடகையாக 1 லட்சத்து 63 ஆயிரம் வெள்ளியை நிதி திரட்டுவதற்கான நடவடிக்கையில் கண்டிப்பாக இறங்கி சுங்கை ஊலார் தோட்டத் தமிழ்ப்பள்ளி இந்நிலத்தைப் பெற்றுத் தருவோம் என்று வாக்குறுதியை டத்தோஸ்ரீ சைஃபுடின் வழங்கினார்.

இந்த சந்திப்புக் கூட்டத்தில் பாடாங் செராய் தொகுதியின் நாடாளமன்ற உறுப்பினர் மு.கருப்பையா , பாடாங் செராய் கெஅடிலான் கட்சியின் தலைவர் பாலசுப்பிரமணியம் , பினாங்கு பத்து ஊபான் நாடாளமன்ற உறுப்பினர் குமரேசன் , மற்றும் முன்னால் கெடா மாநில ஆட்சி குழு உறுப்பினர் சண்முகம் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Exit mobile version