Site icon அநேகன்

தடுப்பூசி செலுத்தும் மையங்களாக தனியார் மருத்துவமனைகள் : கைரி லமாலுடின்

கோலாலம்பூர் | மார்ச் 4:-

முதற்கட்டத் தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தின்கீழ் தனியார் துறை முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்த பந்தாய் மருத்துவமனை போன்ற தனியார் மருத்துவமனைகள் பயன்படுத்தப்படும் என அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறியுள்ளார்.

தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்ட அமைச்சருமான அவர் இவ்விவகாரம் குறித்து பேசுகையில், இதற்கு முன்னர் குறிப்பிட்டது போல் இரண்டாம் மூன்றாம் கட்டத்தில் தனியார் மருத்துவமனைகள் இணைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

நாள் ஒன்றுக்கு 75,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிற நிலையில் இம்முனெடுப்பால் அடுத்தக்கட்டக் 150,000ஆக உயர்த்த வழிவகுக்கும் என அவர் சொன்னார்.

500,000 முன்களப் பணியாளர்களை உட்படுத்திய தேசிய கோவிட்-19 தடுப்பூசி திட்டம் முதற்கட்டமாகக் கடந்த பிப்பரவரி 24ஆம் நாள் தொடங்கிய நிலையில் எதிர்வரும் ஏப்பிரல் மாதம் நிறைவடையும்.

Exit mobile version