Site icon அநேகன்

கனவுந்து மோதி கட்டுமானப் பணியில் இருந்த இரும்புத்தூண் விழுந்ததில் இருவர் பலி

பண்டார் தாசேக் செலாத்தான் | மார்ச் 4:-

சுங்கை பெசி – உலு கிள்ளான் விரைவுச் சாலையில் முழுதாய் கட்டி முடிக்கப்படாத பாலத்தில் பாரம் அதிகம் ஏந்தி வந்த கனவுது மோதியது. அந்த விபத்தில் கட்டி முடிக்கப்படாத பாலத்துக்குத் தொடர்பான இரும்புத் தூண் இடிந்து ஒரு தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி வந்த வேனின் மீது விழுந்தது.

அதில் இருந்த ஐவரில் இருவர் பலியான வேளை மூவர் பலத்தக் காயங்களுடன் உயிர் தப்பினர்.

நேற்று மாலை 6.15 மணியளவில் நடந்த இவ்விபத்தில் அந்த கனவுந்து அக்கட்டுமானப் பணிக்குத் தொடர்பில்லாத வாகனம் என சுங்கை பெசி – உலு கிள்ளான் விரைவுச் சாலை மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

பண்டார் தாசேக் செலத்தான் அருகே உள்ள எம் ஆர் ஆர் 2 சாலையில் இவ்விபத்து நடந்ததால் அங்கு கடுமையானப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தீயணைப்பு – மீட்ப்பணிக் குழு சம்பவம் நடந்த இடத்தில் மேல் விசாரணையை மேற்கொண்டனர். இடிபாடுகளுக்கு இடையில் வேனின் உள்ளே சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணி இரவு 9.30 மணியளவில் முடிவடைந்தது.

Exit mobile version