Site icon அநேகன்

பூர்வீகக் குடிமக்களுக்கு டான்ஶ்ரீ எஸ்.விக்னேஸ்வரன் தளவாடப் பொருட்கள் வழங்கி உதவி

கம்போங் கெனாங் | மார்ச் 7:-

ஜாலோங் சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள பூர்வீக குடியினர் கம்பத்து மக்களுக்கு தளவாடப் பொருட்களை ம.இ.கா தேசியத் தலைவர், டான்ஶ்ரீ எஸ்.விக்னேஸ்வரன் வழங்கினார்.

கம்போங் கெனாங்கில் நிகழ்வில் டான்ஶ்ரீ எஸ்.விக்னேஸ்வரன், லிந்தாங் சட்டமன்ற உறுப்பினர், டத்தோ ஹாஜி சுல்கேப்ளி ஆகியோர் பூர்வீக குடியினர் சேர்ந்த கம்பத்து தோக் பாத்தின்களிடம் அந்த தளவாடப் பொருட்களை எடுத்து கொடுத்தனர்.

அதாவது, 8 பூர்வீக குடியினர் சேர்ந்த பகுதிகளுக்கு அந்த தளவாடப் பொருட்கள் வழங்கப்பட்டது.

இதனிடையே, நிகழ்வில் டான்ஶ்ரீ எஸ்.விக்னேஸ்வரன், ஏற்கனவே இந்த கோரிக்கைகள் என்னிடம் வழங்கப்பட்டன. ஆனால், மக்கள் நடமாட்டம் கட்டுப்பாடு உத்தரவினால் இந்த பொருட்களை தருவதில் கொஞ்சம் தாமதம் ஏற்பட்டது.

தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்கி கொண்டிருக்கும் பூர்வீக குடியினரின் தேவைகள் என்றும் பூர்த்தி செய்யப்படும். எனக்கு பூர்வீக குடியினரின் பிரச்சனைகள் பற்றி நன்றாக தெரியும். எங்களால் முடிந்தவரை தீர்த்து வைப்போம் என்றார்.

இந்த நிகழ்வில் கம்போங் கெனாங்கிற்கு 2 கூடாரம், 25 மேசைகள், 100 நாற்காலிகள் வழங்கப்பட்டன. அதே போல், கம்போங் லண்டாப், பெலாந்தோக், லாவாய், ஹூசேன், அசாப், கெலோ, பிசாங் ஆகிய பூர்விக குடியினர் கம்பங்களுக்கும் தளவாடப் பொருட்கள் அளிக்கப்பட்டன.

Exit mobile version