Site icon அநேகன்

ஆஸ்ட்ரோவின் ஆகஸ்டு 2021 நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்: 23 – 28 ஆகஸ்டு 2021

*நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விபரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை

திங்கள், 23 ஆகஸ்டு
கவசம் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)
ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 202), இரவு 9 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: அழகன், ஜெய கணேஷ் இசுரன், நிஷா சத்யமூர்த்தி, திவ்யா டவினா ரவீன், நரேன், தவநேசன் சிவனந்தன், சோபியா டென்ட்ராஃப் & அபிஷேக் ஜெய குமார்

தங்களின் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு நிலைகளில் இருக்கும் மருத்துவர்கள் சவால்களைச் சமாளிக்கப் போராடுகிறனர்.

தமிழ்லட்சுமி சீசன் 2 (புதிய அத்தியாயங்கள் – 8-12)
ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201), இரவு 9.30 மணி, திங்கள்-வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஹேமாஜி, மூன் நிலா, நித்யஸ்ரீ, சீலன் மனோகரன், ஜேம்ஸ் தேவன் ஆரோக்கியசாமி & தேவேந்திரன் சரிமிர்கன்

ஏமி கஜினி மாமியுடன் உடற்பயிற்சி செய்யும் வேளையில், ஜீவா தாவரங்களுக்குத் தண்ணீர் ஊற்றுகிறார். ஜீவா வேலைகளைச் செய்வதைக் கண்டு கஜினி மாமி மகிழ்ச்சியடைகிறார்.

செவ்வாய், 24 ஆகஸ்டு
நினைத்தாலே இனிக்கும் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஜீ தமிழ் (அலைவரிசை 223), இரவு 7 மணி, திங்கள்–சனி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஆனந்த் செல்வன், சுவாதி, நேஹா ஜா, ஜனனி பிரபு & மிதுன் ராஜ்

ஒரு கிராமத்தைச் சேர்ந்த அப்பாவிப் பெண்ணானப் பொம்மி,  தினமும் தனது இரு சக்கர வாகனத்தில் சுவையான இனிப்புப் பலகாரங்களை  விற்க நகரத்திற்குச் செல்கிறாள். அங்கு அவள் ஒரு குடும்பத்தைச் சந்திக்கிறாள். அக்குடும்பத் தலைவரானத் தெய்வநாயகம் ஏற்கனவே அங்கு இனிப்புத் தொழிலில் புகழ் பெற்றுத் திகழ்கிறார். பொம்மி அக்குடும்பத்துடன் நெருக்கமாகவே, விதியின் சதியால் அவள் மீது சிறிதுக் கூட அன்பே இல்லாத அவரின் பேரனைத் திருமணம் செய்கிறாள். அவர்களுக்கிடையில் பூக்கும் காதலேகதையின் சாரம்சமாகும்.

வியாழன், 26 ஆகஸ்டு
ராத் பாகி ஹை (Raat Baaki Hai) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

BollyOne HD (அலைவரிசை 251), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ராகுல் தேவ், அனுப் சோனி, பவோலி டேம் & தீபனிதா சர்மா

ஒரு முன்னணி நடிகைத் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்த விடுதியில் கொலைச் செய்யப்படுகிறார்.

பாலிக்கா வடு சீசன் 2 (Balika Vadhu Season 2) (சீசன் முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116), இரவு 8 மணி, திங்கள்–வெள்ளி |ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: ஸ்ரேயா பட்டேல் & வான்ஷ் சயானி

ஆனந்தி தனக்கு நடந்த அநீதியை அகற்ற முடிவு செய்கிறாள்.

வெள்ளி, 27 ஆகஸ்டு
ஒன்பது குழி சம்பத் (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

ஆஸ்ட்ரோ தங்கத்திரை எச்டி (அலைவரிசை 241), இரவு 9 மணி | ஆஸ்ட்ரோ கோ மற்றும் எப்போதும் ஆன் டிமாண்ட் வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகை: பாலாஜி மகாராஜா

பொறுப்பில்லாமல் சுற்றித் திரியும் இளையன் ஒரு கிராமப் பெண்ணின் மீது காதல் வயப்படுகிறான். குடும்பப் பெருமை மற்றும் மரியாதையால் அவர்களின் காதல் சோதிக்கப்படுகிறது.

சனி, 28 ஆகஸ்டு
சனம் பேவாஃபா (Sanam Bewafa) (முதல் ஒளிபரப்பு / பிரிமியர்)

கலர்ஸ் ஹிந்தி எச்டி (அலைவரிசை 116),  மதியம் 2.30 மணி | ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஸ்ட்ரீம் செய்து மகிழுங்கள்

நடிகர்கள்: சல்மான் கான் & சாந்தினி

இரண்டுக் குடும்பங்களுக்கிடையேயான முடிவற்றப் போராட்டம் அவர்களின் குழந்தைகள் காதலித்துத் திருமணம் செய்ய முடிவுச் செய்யும் போது மறைந்துவிடுகிறது. ஆனால், அது நீண்டக் காலம் நீடிக்கவில்லை. அவர்களின் காதல் அர்த்தமற்ற முரண்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்குமா இல்லையா என்பதே கதையாகும்.

Exit mobile version