கோலாலம்பூர் | 21/8/2021 :-
அம்னோவின் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நாட்டின் 9வது பிரதாமராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 15வாது பொதுத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக உழைக்க வேண்டும் என பிகேஆர் கட்சியின் தலைவர் அன்வார் இபுராகிம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம், மக்களாட்சி முறை, மலாய் ஆட்சியாளர்கள் அதிகாரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இஸ்மாயில் சப்ரியின் நியமனம் அமைந்துள்ளது என எதிர்க்கட்சி கருதுவதாக அன்வார் குறிப்பிட்டார்.
டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை நாட்டின் 9வது பிரதமராக மாமன்னர் நியமித்ததை சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்வாதாக அன்வார் கூறினார்.
எதிர்வரும் 15வது பொதுத் தேர்தலை எதிர்க்கட்சிகள் சந்திக்க இது பெரும் சவாலாக அமைந்துள்ளதாகவும் அதற்காக மிகக் கசுமையாக உழைக்க வேண்டி உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தவும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்சி பெறச் செய்யவும் பல முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
அனைத்துத் தரப்பினரும் மாமன்னரின் இம்முடிவை முழுமனதோரு ஏற்றுக் கொள்வதோடு 15வது பொதுத் தேர்தலை நோக்கி முழு வீச்சில் களப்பணியில் இறங்க வேண்டும். இதனால், கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் வழங்கிய அதே முடிவை மீண்டும் இந்தப் பொதுத் தேர்தலில் கொண்டு வர வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

