Site icon அநேகன்

புதிய அரசாங்கமானாலும் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட வேண்டும் ! – துன் டாக்டர் மகாதீர்

கோலாலம்பூர் | 21/8/2021 :-

மிக விரைவில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு புதிய அமைச்சரவை உருவாக்கப்பட இருக்கும் நிலையில், கண்டிப்பாக ஊரடங்கு அறிவிக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் கருத்துரைத்துள்ளார்.

புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரையில் காத்திருக்க முடியாது எனவும் கோவிட்-19 நிலை மிகவும் மோசமாக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இப்பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதானதல்ல. அது சொந்தமாகவும் குறைந்திடாது.

தற்போது தீவிரமடைந்து வரும் இத்தொற்று மிக விரைவில் இன்னும் மோசமடையும். எனவே, நாம் உடனடியாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

அரசியலுக்கு முதனமை அளிக்காமல், பெருந்தொற்று மோசமடைந்துள்ள இச்சூழலில்தான் ஊரடங்கு அறிவிக்கப்பட வேண்டும் என துன் மகாதீர் கூறினார்.

மேலும், பெருந்தொற்றைக் கையாள்வதில் மலேசியா மிகவும் பின்தங்கனிய நிலையில் இருப்பதாக The Economist இதழ் அறிக்கை வெளியிட்டிருந்ததையும் மகாதீர் சுட்டிக் காட்டினார்.

பெருந்தொற்று தொடங்கியது முதல் நேற்று மலேசியாவில் மிக அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 23,564 நேர்வுகள் பதிவாகியுள்ளன.

இப்பெருந்தொற்று மிகக் கடுமையான அழுத்தத்தைப் பொது மக்களுக்குக் கொடுத்து வருகிறது. குடும்ப உறவினர்களை இழந்தது முதல் தர்கொலை முயற்சி வரை நேர்ந்துள்ளது.

பெருந்தொற்றால் நாடு சந்தித்துள்ள நெருக்கடிகளைச் சமாளிக்க மருத்துவ, பொருளாதார, சமூகவியல் போன்ற துறை சார்ந்த வல்லுநர்கள் தனார்வ முறையில் முன்வந்திருந்தாலும் அதனை முகிதீனின் ஆட்சி நிராகரித்ததாக துன் மகாதீர் தெரிவித்தார்.

எனவே, அவர்களை ஒரு சிறப்புப் பணிக்குழுவில் மாமன்னர் நியமிக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட மகாதீர், அதனவரசியல் இடையூறுகள் இல்லாதத் தனிச் செயற்குழுவாகச் செயல்பட விட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

Exit mobile version