Site icon அநேகன்

துணைப் பிரதமர், அமைச்சரவை பதவி விவகாரம் : முகிதீன் – இஸ்மாயில் கையில் முடிவு !

கோலாலம்பூர் | 22/8/2021 :-

புதிய பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் அமைச்சரவையில் இடம்பெற இருப்பவர்கள் குறித்து பெர்சத்து கட்சி இன்னும் முடிவு செய்யவில்லை எனவும் அது இஸ்மாயில் – முகிதீன் ஆகியோரின் முடிவுக்கு விட்டு விட்டதாக பெர்சத்துவின் உச்சமன்ற உறுப்பினர் ஃபாயிஸ் நாமன் தெரிவித்தார்.

நேற்று இரவு நடந்த பெர்சத்து கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தில் அமைச்சரவையில் யார் இடம்பெற இருக்கிறார்கள் என்பது குறித்து விவாதிக்கவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும், அமைச்சரவையில் பெர்சத்து இணையவில்லை எனக் கூறப்பட்டு வரும் தகவலிலும் உண்மையில்லை என அவர் கூறினார்.

Exit mobile version