Site icon அநேகன்

GPS நாடாளுமன்ற உறுப்பினருக்கு துணைப் பிரதமர் II பதவி ! – SUPP கட்சி பரிந்துரை

கோலாலம்பூர் | 23/9/2021 :-

இரண்டாம் துணைப் பிரதமர் பதவி ஒன்றை உருவாக்கி அதனை GPS நாடாளுமன்ற உறுப்பினர் வகிக்க வழி வகை செய்ய வேண்டும் என புதிய அரசாங்கத்தை SUPP கட்சி கேட்டுக் கொண்டதாக போர்னியோ போஸ்ட் தகவல் வெளியிட்டுள்ளது.

அப்பதவி சபா – சரவாக் மாநில மக்களின் விவகாரங்களைக் கவனிக்க குறிப்பிட்டு உருவக்கப்பட வேண்டும் என SUPP கட்சியின் பொதுச் செயலாளர் செபஸ்டியன் திங் கூறினார்.

1963ஆம் ஆண்டில் இருந்து சபா – சரவாக் மாநிலங்கங்கள் மலேசியாவின் வளர்சிக்குப் பெரும் பங்கினை ஆற்றி வந்துள்ளது.

GPS கூட்டணியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதால் அவர்களில் ஒருவர் அப்பதவியை வகிக்க வழங்கப்பட வேண்டும்.

இப்பதவியை வழங்கப்படும் நிலையில் சபா – சரவாக் மாநிலங்களின் பங்களிப்பை அங்கிகரிக்குக்ம் வகையில் அமையும் எனவும் அவர் கூறினார்.

இரண்டாவது துணைப் பிரதமர் பதவியை வகிக்க SUPP பரிந்துரைத்தப் பெயர்கள் :

1. ஃபதிலா யூசோஃப் –பொதுப் பணித்துறை முன்னாள் அமைச்சர் (முகிதீன் அரசாங்கத்தின்கீழ் இருந்தவர்)

2. அலெக்சண்டர் நந்தா லிங்கி –  GPSஇன் பொதுச் செயலாளர் / உள்நாடு வானிபம், பயனீட்டாளார் விவகாரத்துறை முன்னாள் அமைச்சர் (முகிதீன் அரசாங்கத்தின்கீழ் இருந்தவர்)

அவ்விருவருமே அமைச்சர்களாகவும் பல்லாண்டுகள் அனுவபம் பெற்றவர்களாகவும் இருக்கின்றனர்.

மேலும், கிழக்கு மலேசியாவின் இதர இனங்களான இபான், பிடாயு, உலு, கடசான், டூசின், பாஜாவ் ஆகியோரின் நிகராளிகளையும் இணைத்து அமைச்சரவை உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் பரிந்துரையை முன் வைத்தார்.

புதிதாக அமைகின்ற அரசாங்கம், சீரான, அப்பழுக்கற்ற, நீதித்துறையை மதிக்கின்ற, கூட்டரசு அரசியல் அமைப்புச்ச் அட்ட விதிகளைப் போற்றுகின்ற அரசாங்கமாக இருக்கும் என மக்கல் எதிர்ப்பார்க்கிறார்கள்.

மேலும், SUPP கட்சியின் சார்பில் நாட்டின் 9வது பிரதமராகி இருக்கும் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிற்குத் தமது வாழ்த்துகளையும் கூறினார்.

Exit mobile version