Site icon அநேகன்

எதிர்க்கட்சிகளுக்குப் புதிய பிரதமர் விடுத்த அழைப்பு : பரிகாசம் செய்யும் இராமசாமி

ஜோர்ஜ்டவுன் | 23/8/2021 :-

கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்த்துப் போராடும் நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகளுக்குப் புதிய பிரதமர் விடுத்த அழைப்பை பினாங்கு மாநிலத்தின் துணை முதலமைச்சர் இராமசாமி பரிகாசம் செய்தார்.

பிரதமர் விடுத்து அழைப்பு ஒரு வெளியுறவுப் பிரிவு அதிகாரியின் பயிற்சி போல் உள்ளது எனவும் கூறினார்.

தாம் சமய – இன விவாகாரங்கள் குறித்து பாராமுகம் காட்டுபவர் அல்ல என்பதைக் காட்டும் வகையில் புதிய பிரதமராக அவர் பொது உறவுப் பயிற்சியை மேற்கொல்ள வேண்டி உள்ளது.

அனைத்துத் தரப்[பினரின் நன்மைக்கான அரசாங்கமாக இது இருக்கிறது என்பதைக் காட்டும் வகையில் அவருக்கு ஏதாவது ஒரு யுக்தி தேவைப்படுகிறது.

கடந்த முகிதின் அரசாங்கத்திற்கும் இஸ்மாயில் சப்ரியின் அரசாஙக்த்திகும் பெரிய வேற்றுமை இல்லாததால் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் விடுத்துள்ள அழைப்பை முழுதாக நம்பிவிட முடியாது என இராமசாமி தெரிவித்தார்.

எனவே, எதிர்க்கட்சியினர் இஸ்மாயில் சப்ரி விடுத்துள்ள அழைப்பை ஏற்கமாட்டார்கள் எனத் தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

Exit mobile version