Site icon அநேகன்

யான் வெள்ளப் பேரிடர் : ஆறாவது சடலம் மீட்பு ! தேடுதல் பணி நிறுத்தம் !

யான் | 23/8/2021 :-

கெடா கோலா மூடா – யான் பகுதியின் ஏற்பட்ட வெள்ளத்தில் காணாமல் போனதாகக் கூறப்பட்டவர்களில் ஆறாவது நபர் சடலமாக மீட்கப்பட்டார்.

இன்று தீத்தி ஹாயுன் பகுதியில் பிற்பகல் 1.30 மணி அளவில் அந்த ஆறாவது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக யான் மாவட்டக் காவல் துறைத் தலைவர் டிஎஸ்பி ஷானாஸ் அக்தார் கூறினார்.

வெள்ளத்தில் ஏறத்தாழ ஒரு கிலோ மீட்டர் வரையில் அடித்து வரப்பட்டதாக நம்பப்படும் ரிட்வான் பொன்மான் (வயது 61) தேங்கிய மரக்கட்டைகளுக்கு இடையில் மீட்கப்பட்டதாகவும் அது சேதமடையாமல் இருந்ததாகவும் கூறினார்.

தீயணைப்பு – மீட்புப் பணியினர், பொதுத் தற்காப்புப் படையினர், காவல் துறையினர் ஆகியயோர் உட்பட 400 அதிகாரிகள் இந்த மீட்புப் பணியில் ஈடுபட்டதாக ஷானாஸ் அக்தார் தெரிவித்தார்.

உடற்கூறாய்வுக்காக ரிட்வானின் சடலம் யான் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது

காணாமல் போனதாகக் கூறப்பட்டக் கடைசி நபரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளதால் அங்கு தேடுதல் பணி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த புதன் கிழமை தொடங்கிய இந்த பேரிடரால் யான் வட்டாரத்தில் 800 வீடுகளும் கோலா மூடா வட்டாரத்தில் 200 வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

Exit mobile version