Site icon அநேகன்

யான் வெள்ளப் பேரிடர் : பாதிக்கப்பட்டக் குடும்பங்களுக்குத் தலா ரி.ம. 500 உதவி நிதி ! குடும்ப உறுப்பினரை இழந்தால் ரி.ம. 5,000 !

யான் | 23/8/2021 :-

யான் – மெர்போக் வட்டாரத்தில் வெள்ளப் பேரிடரால் சேதமடைந்த பொதுச் சொத்துகளையும் மக்கள் வசதிகளையும் சீரமைக்க கெடா மாநில அரசுக்கு ரிம 75 மில்லியனை உடனடிய உதவியாகப் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் அறிவித்தார்.

அந்த ஒதுக்கீட்டில் சுற்றுச்சூழல் – தண்ணீர் வளத் துறை அமைச்சின் வாயிலாக ரி.ம. 50 மில்லியனும், 27 கி.மீ. நீளம் கொண்ட ஆறு – நீர் பாசன மேம்பாட்டிற்கு ரி.ம. 5 மில்லியனும் உட்படுத்தப்பட்டவையாகும்.

நிதி ஒதுக்கீடு விவரங்கள் :

இரண்டு பாலங்கள் : ரி.ம. 23 மில்லியன்

கூருன், தூப்பா பகுதிகளில் நீர் சுத்திகரிப்பு நிலையம் : ரி.ம. 2 மில்லியன்

சோபோ அணை (முதற்பகுதி) : ரி.ம. 20 மில்லியன்

கிராமப்புற சுற்றுலா மேம்பாடு, நீர் வசதி சீரமைப்பு

அதே நேரம், பேரிடர் நிர்வாக நிறுவனம் (நட்மா) வாயிலாக இப்பேரிடரால் பாதிக்கப்பட்டக் குடும்பங்களுக்குத் தலா ரி.ம. 500 உதவித் தொகையாக வழங்கப்படும் எனவும் பிரதமர் அறிவித்துள்ளார்.

இப்பேரிடரில் குடும்ப உறுப்பினர்களை இழந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரி.ம. 5,000 வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

Exit mobile version