Site icon அநேகன்

கோவிட்-19 : இன்று 174 பேர் பலி ! 19,053 பேர் குணமடைந்தனர் !

புத்ராஜெயா | 23/8/2021 :-

மலேசியாவில் இன்று 17,672 பேருக்குப் புதிதாக கோவிட்-19 நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,572,765-ஐ எட்டியுள்ளது.

இன்று கோவிட்-19 பெருந்தொற்றால் 174 பேர் பலியானர். அதனால் தற்போது மொத்த மரண எண்ணிக்கை இது வரையில் 14,342 ஆக உயர்ந்துள்ளது.

தற்பொழுது 1,040 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 502 பேருக்கு சுவாச உதவிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சைக்குப் பின்னர் இன்று 19,053 பேர் குணமடைந்துள்ள வேளையில் 1,297,723 பேர் மொத்தமாக இந்நோயிலிருந்து விடுபட்டுள்ளனர்.

Exit mobile version