Site icon அநேகன்

முகக்கவரியுடன் முகக்கவசத்தையும் அணிய ஊக்குவிக்கும் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா !

கோலாலம்பூர் | 24/8/2021 :-

கோவிட்-19 பெருந்தொற்றுப் பாதிக்காமல் இருக்க அரசாங்கம் முகக்கவரியை அணிவது கட்டாயமாக்கியது. தற்போது முகக்கவசத்தையும் சேர்த்து அணிவதே சிறந்த பாதுகாப்பு நடவடிக்கை என்கிறார் சுகாதாரத் துறை அமைச்சின் தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா.

முன்னதாக, பொதுமக்கள் இரட்டை முகக்கவரியை அணிய அவர் ஊக்குவித்திருந்தார்.

சமூகத்தினடையே கோவிட்-19 பெருந்தொற்று பரவாமல் இருப்பதற்கு முகக்கவரியுடன் முகக்கவசத்தையும் அணியும் இந்த வழி முறை கூடுதல் பாதுகாப்பானதாக இருக்கும் என அவர் சொன்னார்.

மேலும், வெளியில் நடமாடும் போது டாக்டர் நோர் ஹிஷாமே முகக்கவரியுடன் முகக்கவசத்தையும் சேர்த்து அணியும் வழக்கம் கொண்டு எடுத்துக் காட்டாக விளங்குகிறார்.

தற்போது, மிகத் தீவிரமாக கோவிட்-19 பெருந்தொற்று பரவி வரவதைத் தொடர்ந்து இந்த வழிமுறை ஊக்குவிக்கப்படுகிறது.

Exit mobile version