Site icon அநேகன்

இதர எதிர்க்கட்சிகளைக் கூட்டணியின் இணைத்துக் கொள்ளுங்கள் ! – நம்பிக்கைக் கூட்டணிக்குப் பரிந்துரை

சிகாம்பூட் | 24/8/2021 :-

எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனும் நம்பிக்கைக் கூட்டணியின் தலைமைத்துவ மன்றத்தின் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அவர்களை அதிகாரப்பூர்வாமக் அழைத்து கூட்டணீயில் இணைத்துக் கொள்ள வேண்டும் என அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹன்னா இயோ (சிகாம்பூட்), மரியா சின் அப்துல்லா (பெட்டாலிங் ஜெயா), அமானா கட்சியின் மேலவை உறுப்பினர் செனட்டர் இராஜ் முன்னி சாபு ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

எதிர்க்கட்சிகள் ஒரே குரலாக பிகேஆர் தலைவர் அன்வார் இபுராகிமைப் பிரதமர் வேட்பாளாரகத் தேர்ந்தெடுத்த போதிலும், 105 என்ற எண்ணிக்கைப் போதவில்லை எனக் கூறினர்.

அப்போது கிடைத்த அந்த ஆதரவை நம்பிக்கைக் கூட்டணி நிலை நிறுத்துவதோடு அதனை மேலும் மேம்படுத்த வேண்டும்.

எனவே, வாரிசான், மூடா, பெஜுவாங், UPKO, பிபிஎஸ் ஆகியக் கட்சிகளை நம்பிக்கைக் கூட்டணியில் இணைத்துக் கொள்ள திகாரப்பூர்வமாக அழைக்க வேண்டுன் என அவர்கள் குறிப்பிட்டனர்.

கடந்த 18 ஆம் நாள் கிடைத்தை 105 பேரின் ஆதரவை நிலை நிறுத்தி அதிகாரப்பூர்வமாக அடுத்தத் தேர்தலுக்கு ஒத்துழைக்க இதர எதிர்க்கட்சிகள் அழைக்கப்பட வேண்டும்

ஒரே குடையின் கீழ் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைய வேண்டும் எனும் நம்பிக்கைக் கூட்டனீயின் எண்ணத்திற்கு இணங்க அந்த் நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்.

நாட்டை வழி நடத்த தீபகற்ப மலேசியா மட்டும் இன்றி சபா – சரவாக் மக்களின் மிகச் சரியானத் தேர்வு நம்பிக்கைக் கூட்டணி தான் என்பதனை உறுதிப்படுத்த 105 பேரின் ஆதரவு அட்டிக் காக்கப்பட வேண்டும்.

எனவே, அதற்குண்டான நடவடிக்கைகளை உடனடியாகச் செய்ய வேண்டும் என அவர்கல் அனைவரும் கேட்டுக் கொண்டனர்.

Exit mobile version