Site icon அநேகன்

துணைப் பிரதமராக அஸ்மின் அலி ? வலுக்கும் ஆருடங்கள்

கோலாலம்பூர் | 24/8/2021 :-

கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்மின் அலி துணைப் பிரதமராக நியமிக்கப்படுவார் என பெர்சத்து, அம்னோ தரப்பு ஆருடங்கள் வலுக்கின்றன.

நாட்டின் இரண்டாவது முக்கியமானப் பதவியில் அஸ்மின் நியமிக்கப்படலாம் என பெர்சத்துவைச் சேர்ந்த பெயர் வெளீயிட விரும்பாத அஸ்மின் அலிக்கு மிக நெருக்கமான வட்டத்தில் இருக்கும் நபர் தெரிவித்ததாக மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.

இதே தகவலை அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஒருவரும் அதே கட்சியின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

அமைக்கப்பட்டிருக்கும் அரசாங்கத்தின் பெரும்பான்மையை நிலை பெறச் செய்யவே அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக ஒரு தரப்பும் தமக்கு அப்பதவியை வழங்கவில்லை என்றால் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு வழங்கிய ஆதரவை தமது ஆதரவாளர்களுடன் மீட்டுக் கொள்வதாக அஸ்மின் அலி மிரட்டியதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

அஸ்மின் அலி தரப்பில் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கல் இருப்பதாகவும் அது இஸ்மாயில் சப்ரியின் நிலையை ஆட்டம் காணச் செய்யும் எனக் கூறப்ப்படுகிறது.

இது வரையில் அஸ்மின் அலி தரப்பிடமிருந்து இவ்விவக்காரம் குறித்து எந்தவிதத் தகவலும் இல்லை

பதவி வழங்க வில்லை என்றால் ஆதரவை மீட்டுக் கொள்வதாக மிரட்டப்பட்டத் தகவலை அஸ்மின் அலி தரப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராரும் பெர்சத்து கட்சியின் உச்சமன்றத்தைச் சேர்ந்தவருமான இரஸாலி இட்ரிஸ் தெரிவித்தார்.

மேலும், துணைப் பிரதமர் பதவியில் இன்னும் யாரும் நியமிக்கப்படும் முடிவு எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

இந்நிலையில், பெர்சத்து கட்சியின் பொதுச் செயலாளர் ஹம்ஸா ஸைனுடின், உச்சமன்ற உறுப்பினர் ரெட்ஸுவான் முகம்மது யூசோஃப் ஆகியோரின் பெயர்களும் துணைப் பிரதமர் பதவி குறித்து பேசப்பட்டு வருகின்றன.

அதே சமயம், சபா – சரவாக் மாநில விவகாரங்களைக் கவனிக்க இரண்டாம் துணைப் பிரதமர் பதவியை GPS கோரி வருகிறது.

Exit mobile version