Site icon அநேகன்

பிக்பாஸ் சீசன் 2-இல் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. 100 நாட்களை எட்டவிருக்கும் நிலையில் அடுத்த சீசனுக்கான செலக்‌ஷன் தற்போது நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துருவங்கள் பதினாறு படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த் தமிழ் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொள்ள தனக்கு அழைப்பு வந்ததாகவும் ஆனால் அதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ”நான் நிச்சயம் இரண்டாவது சீசனில் கலந்துகொள்வேன்” என யாஷிகா அவர் கூறியுள்ளார்.

மேலும் இதில் மாப்பிள்ளை சீரியல் புகழ் ஸ்ரீஜா, தெய்வமகள் புகழ் கிருஷ்ணா, பிரபல தொகுப்பாளினி திவ்யடர்ஷினி, கலக்க போவது யாரு பாலா, நடிகை ரம்பா, சரவணன் மீனாட்சி புகழ் ரியோ மற்றும் ரச்சிதா, காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி, நடிகை சினேகா, கலக்க போவது யாரு கதிர், நடிகை ரியமிக்கா, மைனா நந்தினி, மற்றும் பிரபல வில்லன் ரியாஸ் ஆகியோர் கலந்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version