கோலாலம்பூர், செப்.18-
வரியை செலுத்தாமல் ஏமாற்றுபவர்களில் டாக்டர்கள் முக்கிய இடம் வகிக்கின்றனர் என்று வருமான வரித்துறை வாரியம் தெரிவித்துள்ளது.
வருமான வரித்துறை இவ்வாண்டில் இதுவரை மேற்கொண்ட வரிக் கணக்கு மீதான ஆய்வுகளின் வழி, அதிகமாக வரிக் கட்டாமல் இருப்பவர்களில் டாக்டர்கள் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. தங்களின் வருமான வரிக் கணக்கு அறிவிப்பின் கீழ் வரிக் கட்டாமல் போனதற்கான கூடுதலாக விதிக்கப்பட்ட வரி மற்றும் அபாரத் தொகையான வெ. 115 கோடி வரை செலுத்தாமல் இருப்பவர்கள் டாக்டர்கள்தான் என்று கூறப்பட்டது.
அடுத்து வரி தொகையைச் செலுத்த வேண்டியவர்கள் பட்டியலில் பொறியியலாளர்கள், கட்டடக் கலைஞர்கள் மற்றும் வழிக்கறிஞர்கள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அடுத்துவரும் நடவடிக்கைகளின் போது இவர்கள் அனைவரும் குறிவைக்கப்படுவார்கள் என்று வருமான வரித் துறையின் தலைமை நிர்வாக அதிகாரி சாபின் சமிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 8 மாத காலத்தில் வருமான வரித் துறை, 4,610 நிபுணத்துவ தொழில் சார்ந்தவர்களின் கணக்குகளைக் குறிவைத்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதில் இதில் 3,000 மருத்துவர்கள் அடங்குவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
