Site icon அநேகன்

அனுபவம் இல்லாததால் டெம்பாலே காயம் அடைந்தார்!

பார்சிலோனா, செப்.19 –

பார்சிலோனா கிளப்பின் இளம் தாக்குதல் ஆட்டக்காரர் ஓஸ்மானே டெம்பாலே போதுமான அனுபவம் கொண்டிருக்காததால் அவருக்கு தசை பிடிப்பு காயம் ஏற்பட்டதாக நிர்வாகி எர்னாஸ்டோ வல்வார்டே தெரிவித்துள்ளார்.

20 வயதுடைய டெம்பாலே கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கெத்தாப்பே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 25 ஆவது நிமிடத்தில் காயம் அடைந்தார். கடந்த கோடை காலத்தில் ஜெர்மனியின் பொருசியா டார்ட்மூண்ட் அணியில் இருந்து மிகப் பெரிய தொகையில் பார்சிலோனாவுக்கு மாற்றலாகிய டெம்பாலே, இந்த ஆண்டின் இறுதி வரை விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

டெம்பாலேவுக்கு இதற்கு முன்னர் தசை காயங்கள் ஏற்பட்டதில்லை என்பதால் அவரால் வலியை உணர முடியவில்லை என வல்வார்டே தெரிவித்தார். மிக வேகமான ஓடி கொண்டிருக்கும் ஓர் ஆட்டக்காரர் பந்தை பின்னுக்கு அனுப்பும்போது காயம் அடைவது இயல்பான ஒன்றுதான் என அவர் சொன்னார்.

பின்லாந்தில் தசைப் பிடிப்புக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ள டெம்பாலே வெகு விரைவில் பார்சிலோனா கிளப்பில் மீண்டும் விளையாடுவார் என தாம் எதிர்பார்ப்பதாக வால்வேர்டே தெரிவித்தார்.

டெம்பாலேவின் இடத்தை நிரப்ப ஜெராட் டியோல்ப், அலெய்க்ஸ் விடால், டெனிஸ் சுவாரேஸ், ஆன்ட்ரி கோமேஸ் ஆகியோரில் ஒருவரைத் தேர்தெடுக்கப் போவதாக வால்வெர்டே தெரிவித்தார்.

Exit mobile version