Site icon அநேகன்

இங்கிலாந்து லீக் கிண்ணம் – நான்காவது சுற்றில் டோட்டேன்ஹம்!

லண்டன், செப்.20 –

இங்கிலாந்து லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் நான்காவது சுற்றுக்கு டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் தகுதிப் பெற்றுள்ளது.செவ்வாய்கிழமை நடந்த ஆட்டத்தில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் 1 – 0 என்ற கோலில் பார்ன்ஸ்லி அணியை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் அணியின் ஒரே கோலை டெலி அலி போட்டார். வெம்பிளி அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் வெறும் 23 ஆயிரத்து 926 ரசிகர்கள் மட்டுமே திரண்டிருந்தனர்.

இங்கிலீஷ் பிரீமியர் லீக் போட்டியில் வெம்பிளி அரங்கில் வெற்றி பெற கடும் சவாலை சந்தித்து வரும் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர், இங்கிலாந்து லீக் கிண்ணப் போட்டியிலும் அத்தகையை சவாலை எதிர்நோக்கியது.

எனினும் இரண்டாம் பாதி ஆட்டத்தின் 65 ஆவது நிமிடத்தில் டெலி அலி போட்ட கோல், டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரை மீண்டும் ஓர் ஏமாற்றத்தில் இருந்து காப்பாற்றியது.

இங்கிலாந்து லீக் கிண்ணப் போட்டியில் சொந்த அரங்கில் நடைபெற்ற 19 ஆட்டங்களில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் 18 ஆவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

Exit mobile version